ரூ.3.78 கோடி மதிப்பீட்டில் கடனுதவிகளை வழங்கிய அமைச்சர் சிவசங்கர்

ரூ.3.78 கோடி மதிப்பீட்டில் கடனுதவிகளை வழங்கிய அமைச்சர் சிவசங்கர்
X

அரியலூர் மாவட்டத்தில் கூட்டுறவுத் துறையின் சார்பில் 807 பயனாளிகளுக்கு ரூ.3.78 கோடி மதிப்பீட்டில் பல்வேறு கடனுதவிகளை போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் வழங்கினார்.


கூட்டுறவுத் துறையின் சார்பில் 807 பயனாளிகளுக்கு ரூ.3.78 கோடி மதிப்பீட்டில் கடனுதவிகளை அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்.

அரியலூர் மாவட்டத்தில் கூட்டுறவுத் துறையின் சார்பில் 807 பயனாளிகளுக்கு ரூ.3.78 கோடி மதிப்பீட்டில் பல்வேறு கடனுதவிகளை போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் வழங்கினார்.

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியம், சம்போடை கிராமத்தில் கூட்டுறவுத் துறையின் சார்பில் முத்துசேர்வாமடம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மூலம் நகரும் நியாயவிலைக் கடையினை துவக்கி வைத்து, பயனாளிகளுக்கு பல்வேறு கடனுதவிகளை போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட பெ.ரமண சரஸ்வதி, ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்ச்சியில், போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பேசியதாவது,

தமிழ்நாடு முதலமைச்சர் ஏழை, எளிய பொதுமக்கள் பயன்பெறும் வகையில் கூட்டுறவுத் துறையின் சார்பில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் இன்றைய தினம் சம்போடை கிராமத்தில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக பொது விநியோகத் திட்டத்தின்கீழ் நகரும் நியாயவிலைக்கடை அங்காடி துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

மேலும், 24 விவசாயிகளுக்கு ரூ.21 இலட்சம் மதிப்பீட்டில் பயிர் கடனும், 4 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2 இலட்சம் மதிப்பீட்டில் மாற்றுத்திறனாளி கடனும், 32 மகளிர் சுயஉதவிக்குழுவில் உள்ள 453 உறுப்பினர்களுக்கு ரூ.217.80 இலட்சம் மதிப்பீட்டில் டாப்செட்கோ கடனும், 11 குழுக்களில் உள்ள 147 உறுப்பினர்களுக்கு ரூ.68.25 இலட்சம் மதிப்பீட்டில் டாம்கோ கடனும், 10 மகளிர் சுயஉதவிக்குழுவில் உள்ள 163 உறுப்பினர்களுக்கு ரூ.58.65 இலட்சம் மதிப்பீட்டில் நேரடி கடனும், கால்நடைப் பராமரிப்புத் திட்டத்தின்கீழ் 15 நபர்களுக்கு ரூ.4.70 இலட்சம் மதிப்பீட்டில் நடைமுறை மூலதன கடனும், 1 நபருக்கு ரூ.6 இலட்சம் வீட்டு அடமான கடனும் என ஆகமொத்தம் 807 பயனாளிகளுக்கு ரூ.3 கோடியே 78 இலட்சத்து 40 ஆயிரம் மதிப்பீட்டில் பல்வேறு கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தபடி, மகளிர் அரசு நகரப் பேருந்துகளில் கட்டணமின்றி பயணம் செய்து வருகின்றனர். மேலும் கொரோனா பேரிடர் காலத்தில் நிவாரணத்தொகையாக குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.4,000/- வழங்கப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த ஓராண்டில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு சிறப்பான திட்டங்களை செயல்படுத்தியுள்ளார்கள்.

மாமன்னர் இராஜேந்திர சோழன் ஆட்சி செய்த சிறப்பு மிக்க ஊர் கங்கைகொண்ட சோழபுரமாகும். இத்தகைய சிறப்பு மிக்க மாமன்னர் இராஜேந்திர சோழன் அவர்களின் பிறந்த நாள் அரசு விழாவாக தற்பொழுது கொண்டாடப்படவுள்ளது. மேலும், அவர் வாழ்ந்த அரண்மனை தொல்லியல் துறை மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தமிழக அரசின் இதுபோன்ற நலத்திட்ட உதவிகளை பொதுமக்கள் உரிய முறையில் பெற்று பயன்பெற வேண்டும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், கூட்டுறவுத்துறை மண்டல இணைப்பதிவாளர் தீபாசங்கரி, மாவட்ட வழங்கல் அலுவலர் ரவிச்சந்திரன், ஊராட்சி மன்றத்தலைவர் பாரதி மற்றும் அரசு அலுவலர் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்