மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரியலூர், பெரம்பலூர் மாவட்ட மாநாடு
ஜெயங்கொண்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரியலூர்,பெரம்பலூர் மாவட்ட மாநாடு நடந்தது.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சன்னதி தெருவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரியலூர்,பெரம்பலூர் மாவட்ட 8 வது மாநாடு மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மாநிலக்குழு உறுப்பினர் சின்னதுரை, மாவட்ட செயலாளர் மணிவேல் ஆகியோர் தலைமை வகித்தனர். செயற்குழு உறுப்பினர்கள் செல்லதுரை, மகாராஜன், இளங்கோவன் உட்பட நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். முன்னதாக பேரணி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார். திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணைகள் கட்டி பாசன வசதிகள் ஏற்படுத்தி தரவேண்டும். திருமானூர் பகுதியில் கல்லூரி, நவீன் அரிசிஆலை, தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும். பெட்ரோல்,டீசல் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
தொடர்ந்து, பத்திரிகையாளர்களை சந்தித்த ஜி.ராமகிருஷ்ணன், அரியலூர் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடங்குவதை மத்திய அரசு கைவிட வேண்டும். தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான மாநில அரசு இத்திட்டத்தை எதிர்த்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.
மழை வெள்ளத்தால் சேதமடைந்த நெற்பயிர்களுக்கு ஹெக்டருக்கு ரூ.20,000 மாநில அரசு அறிவித்துள்ளதை ரூ.30,000 ஆக உயர்த்தி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
அரியலூர் - வங்கி ஊழியர் சங்கத்தினர் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு அளிக்கும் என கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் ஜி ராமகிருஷ்ணன் தெரிவித்தார்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu