ஜெயங்கொண்டத்தில் விதவைப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தவர் கைது

ஜெயங்கொண்டத்தில் விதவைப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தவர் கைது
X

ஜெயங்கொண்டத்தில் விதவையை பாலியல் பலாத்காரம்  செய்ததாக கைது செய்யப்பட்ட வாலிபர்

ஜெயங்கொண்டத்தில் நள்ளிரவில் வீடு புகுந்து விதவைப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தவரை போலீசார் கைது செய்தனர்.

அரியலூர் மாவட்டம் கீழமாளிகை கிராமம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் ரஞ்சித். வயது 25. கூலி தொழிலாளி. அதே பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய, கணவனை இழந்த பெண் ஜோதி, அவரது வீட்டில் தூங்கிகொண்டிருந்தார்.

அப்போது நள்ளிரவில் வீடு புகுந்து ஜோதியை, ரஞ்சித் என்பவர் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து ஜோதி, ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் போலீசார் தப்பி ஓடிய ரஞ்சித்தை தேடிவந்த நிலையில், அப்பகுதி மக்கள் மூலம் கிடைத்த ரகசிய தகவலின்பேரில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சூர்யா, ரேப்பிங் கேஸில் ரஞ்சித்தை கைது செய்து விசாரித்து வருகிறார். நள்ளிரவில் வீடு புகுந்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
latest agriculture research using ai