மொழிப்போர் தியாகி க.சொ.கணேசன் நினைவு தினத்தை முன்னிட்டு மலரஞ்சலி

மொழிப்போர் தியாகி க.சொ.கணேசன் நினைவு தினத்தை முன்னிட்டு மலரஞ்சலி
X

ஜெயங்கொண்டம் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மொழிப்போர் தியாகி,  க.சொ.கணேசன் அவர்களின் 17-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, போக்குவரத்துத்துறை அமைச்சருமான சா.சி.சிவசங்கர் தலைமையில் மலர்வளையம் வைத்து, மலரஞ்சலி செலுத்தப்பட்டது.


மொழிப்போர் தியாகி க.சொ.கணேசன் 17ம் ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு அமைச்சர் சிவசங்கர் தலைமையில் மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

ஜெயங்கொண்டம் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மொழிப்போர் தியாகி, மக்கள் தொண்டர் க.சொ.கணேசன் அவர்களின் 17-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, கண்டியங்கொல்லை கிராமத்தில் உள்ள அவரது நினைவிடத்தில், மாவட்ட தி.மு.க செயலாளரும், தமிழ்நாடு அரசின் போக்குவரத்துத்துறை அமைச்சருமான சா.சி.சிவசங்கர் தலைமையில் மலர்வளையம் வைத்து, மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

பின்னர் தா.பழூர் ஒன்றிய கழக அலுவலகத்தில் உள்ள அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்தும், அவரது முழு திருவுருவ வெண்கல சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தியும், தா.பழூர் நகரில் மௌன ஊர்வலமும் நடைபெற்றது.

இந்நிகழ்வுகளில் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன், கழக சட்டதிட்ட திருத்தக்குழு உறுப்பினர் சுபா.சந்திரசேகர், மாவட்ட பொருளாளர் சி.ஆர்.எம்.பொய்யாமொழி, மாவட்ட துணைச் செயலாளர் மு.கணேசன், ஜெயங்கொண்டம் நகர செயலாளர் வெ.கொ.கருணாநிதி, ஒன்றிய கழக செயலாளர்கள் ஜெயங்கொண்டம் தெற்கு இரா.மணிமாறன், ஆண்டிமடம் வடக்கு ரெங்க.முருகன், தா.பழூர் மேற்கு வா.சௌந்தரராஜன், ஆண்டிமடம் தெற்கு ஆர்.கலியபெருமாள், ஜெயங்கொண்டம் நகர்மன்ற தலைவர் சுமதி சிவக்குமார், ஜெயங்கொண்டம் ஒன்றிய துணைப் பெருந்தலைவர் லதா கண்ணன், உடையார்பாளையம் பேரூராட்சிமன்ற தலைவர் மலர்விழி ரஞ்சித்குமார், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட குழு உறுப்பினர் உலகநாதன், சிபிஐ மாவட்ட செயலாளர் ராமநாதன்,சிபிஐ ஒன்றிய செயலாளர் அபிமன்னன்,காங்கிரஸ் வட்டார தலைவர் சரவணன்,விசிக ஒன்றிய செயலாளர் தங்கராசு,திக ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம், மதிமுக ஒன்றிய குழு உறுப்பினர் எழிலரசன், திமுக பொதுக்குழு உறுப்பினர்கள் அண்ணாதுரை,அன்பழகன், மாவட்ட அணி அமைப்பாளர்கள் என்.ஆர்.இராமதுரை, எம்.ஜி.இராஜேந்திரன், தங்க.இராமகிருஷ்ணன், எஸ்.ஆர்.இராமராஜன், ஆர்.இளஞ்செழியன், ஒன்றிய, நகர கழக நிர்வாகிகள், சார்பு அணிகளின் நிர்வாகிகள், கிளை கழக செயலாளர்கள், தோழமைக் கட்சியினர் மற்றும் கழக உடன்பிறப்புகள் பெருந்திரளாக கலந்துகொண்டனர்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா