இன்ஸ்டாகிராமில் காதல் : புதுமண ஜோடிகள் போலீஸ் நிலையத்தில் தஞ்சம்

காவல் நிலையத்தில் தஞ்சமடைந்த புதுமண ஜோடி
அரியலூர் மாவட்டம் சுத்தமல்லி கிராமம் குட்டையர்த்தெருவை சேர்ந்த சேகர் என்பவரின் மகன் சரத்குமார் (22). இவர் ஐடி படித்துவிட்டு படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு டிரைவராக பணிபுரிந்து வருகிறார். சிறுகடம்பூர் கிராமம் வடக்குத் தெருவைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவரது மகள் ரவீனா (19). அரியலூர் அரசு கல்லூரியில் முதலாமாண்டு பி. ஏ ஆங்கிலம் பயின்று வருகிறார்.
சரத்குமார், ரவீனா ஆகிய இருவருக்கும் இன்ஸ்டாகிராமில் பழக்கம் ஏற்பட்டு அது நாளடைவில் காதலாக மாறியது. கடந்த 6 மாத காலமாக காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதல் விவகாரம் ரவீனாவின் குடும்பத்தினருக்கு தெரியவந்து உள்ளது. காதலுக்கு பெண்ணின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
இதனால் கடந்த 25-ம் தேதி சரத்குமார், பிரவீனா இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருச்சியில் உள்ள ஒரு அம்மன் கோயிலில் வைத்து காதல் ஜோடிகள் திருமணம் செய்து கொண்டனர். திருச்சி அருகே உள்ள வெள்ளலூரில் சரத்குமாரின் பெரியப்பா வீட்டில் தங்கியுள்ளனர்.
இந்நிலையில் பெண்ணை காணவில்லை என பெண்ணின் தாயார் செந்தமிழ்ச்செல்வி இரும்புலிக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின்.பேரில் போலீசார் தேடிவந்த நிலையில் பெண்ணின் குடும்பத்தினரின் பேச்சைக் கேட்டு பிரித்து விடுவார்களோ என்று எண்ணிய காதல் ஜோடிகள் பாதுகாப்புக்காக ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.
இது குறித்து அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி புதுமண ஜோடிகளின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் இரு குடும்பத்தினரையும் சமாதானம் செய்து வைத்த போலீசார் கல்லூரி மாணவி ரவீனா காதல் கணவன் சரத்குமார் குடும்பத்தினருடன் அனுப்பி வைத்தனர்.
இதில் பெண்ணின் தாயார் செந்தமிழ்ச்செல்வி, தாய்மாமன் பழனிவேல் ஆகியோர் தங்கள் பேச்சை கேட்காத பெண் தேவை இல்லை என போலீசாருடன் சண்டையிட்டு கோபத்துடன் திரும்பி சென்றனர். இதனால் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu