அரியலூர் மாவட்டத்தில் வாக்கு பெட்டிகள் தயார் செய்யும் பணி மும்முரம்

அரியலூர் மாவட்டத்தில் உள்ளாட்சி இடைத்தேர்தலையொட்டி வாக்குப்பெட்டிகள் தயார்படுத்தும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள தா.பழூர் ஒன்றியத்தில் உள்ளாட்சி மன்ற தேர்தலில் காலியாக உள்ள பதவிகளுக்கு தேர்தல் வரும் 9 ஆம் தேதி நடைபெற உள்ளது. அதன்படி தா.பழூர் ஒன்றியத்தில் மனகெதி மற்றும் நாயகனைப்பிரியாள் ஆகிய ஊராட்சிகளுக்கு தலைவர் பதவிக்கும், அம்பாப்பூர் ஊராட்சிக்கு வார்டு உறுப்பினர் பதவிக்கு தேர்தல் நடைபெறுகிறது.

இந்நிலையில் தா.பழூர் ஒன்றிய அலுவலகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கு வாக்குச்சாவடி மையத்திற்கு அனுப்புவதற்கு தேவையான உபகரணங்கள் தயார் செய்து வருகின்றனர்.

தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலருமான ஜெயராஜ் முன்னிலையில் வாக்கு பெட்டிகள் தயார் செய்யப்பட்டது.

இதில் வாக்குப் பெட்டி, வாக்காளர் பட்டியல், வாக்குச்சீட்டு, வாக்களிப்பு மறைவு அட்டைகள், தாள் முத்திரை,மை, முத்திரை அரக்கு, மெழுகுவர்த்தி, தீப்பெட்டி, உள்ளிடட் 42 வாக்குச்சாவடி பொருட்கள் உள்ளிட்டவைகளை தயார் செய்து வைத்துள்ளனர்.

அந்தந்த வாக்கு மையத்திற்கு அனுப்புவதற்கு மூட்டையாக கட்டி பூத் எண் வாரியாக அடையாள அட்டைகள் ஒட்டி தயார் நிலையில் வைத்துள்ளனர்.

தேர்தல் உதவியாளர் அபிமன்யு மற்றும் அலுவலக உதவியாளர்கள் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!