அரியலூர்: லோடு ஆட்டோ திருடிய கணவன்- மனைவி உள்பட 3 பேர் கைது

அரியலூர்: லோடு ஆட்டோ  திருடிய கணவன்- மனைவி உள்பட  3 பேர் கைது
X

கைது செய்யப்பட்ட அப்பு

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியில் லோடு ஆட்டோக்களை திருடிய கணவன்- மனைவி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா அருகே காய்கறிக் கடை வைத்துள்ள சகுந்தலா என்பவருக்கு சொந்தமான லோடு ஆட்டோ கடந்த 19 ம் தேதி காணாமல் போன நிலையில், ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்நிலையில், ஜெயங்கொண்டம் காவல் உதவி ஆய்வாளர் முருகன் தலைமையிலான போலீசார் அங்குள்ள தனியார் கல்லூரி அருகே வாகன சோதனையில் நேற்று ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அவ்வழியே வந்த லோடு ஆட்டோவை மறித்து விசாரணை மேற்கொண்டதில், திருட்டு போனதாக புகார் அளிக்கப்பட்ட சகுந்தலாவின் லோடு ஆட்டோ என்பதும், அதனை திருடி வந்ததும் தெரியவந்தது.


இதையடுத்து லோடு ஆட்டோவை ஓட்டிவந்த கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தை சேர்ந்த அப்பு(25), அவரது மனைவி அன்னபூரணி(23) மற்றும் ஆட்டோவில் வந்த தஞ்சாவூரைச் சேர்ந்த 15 வயது சிறுவன் ஆகிய 3 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.

நீதிமன்ற உத்தரவின் படி அப்பு ஜெயங்கொண்டம் கிளை சிறையிலும், அன்னபூரணியை திருச்சி மகளிர் சிறையிலும், சிறுவன் திருச்சி சிறார்கள் சீர்திருத்த பள்ளியிலும் அடைக்கப்பட்டனர்.

மேலும், முன்னதாக அப்பு மற்றும் அன்னபூரணி மேற்கொண்ட விசாரணையில் அவர்களிடம் மற்றொரு திருடப்பட்ட லோடு ஆட்டோ இருப்பது தெரியவந்தது. அதையும் பறிமுதல் செய்த போலீசார், மேலும் அவர்களிடமிருந்து வெள்ளி கொலுசுகள் 3 ஜோடி, கால் மெட்டி 92, தலா 2 கிராம் மதிப்புடைய தங்க மோதிரங்கள் 3 ஆகியற்றையும் பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!