ஜெயங்கொண்டம் : அம்மன் கோவில்களில் ஆடி கடைசி வெள்ளி சிறப்பு வழிபாடு
ஜெயங்கொண்டத்தில் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
ஜெயங்கொண்டம் பகுதியில் ஆடி கடை வெள்ளி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு.
ஜெயங்கொண்டம் பகுதியில் உள்ள அனைத்து கிராமங்களிலும் ஆடி மாதம் கடைசி வெள்ளியை முன்னிட்டு அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ஜெயங்கொண்டம் கழுமலை நாதர் கோவிலில் உள்ள துர்க்கை அம்மன், கும்பகோணம் சாலையில் உள்ள மகா மாரியம்மன், சமயபுரம் மாரியம்மன், கங்கைகொண்ட சோழபுரம் துர்க்கை அம்மன், மகிஷாசுரமர்த்தினி, செங்குந்தபுரம் மாரியம்மன், பொன்பரப்பி திரௌபதி அம்மன், மாரியம்மன், சாமுண்டீஸ் வரி அம்மன், இலையூர் செல்லியம்மன், சின்னவளையம் திரௌபதி அம்மன், வாரியங்காவல் மாரியம்மன், மலங்கன் குடியிருப்பு அரச மரத்து முத்து மாரியம்மன் உள்ளிட்ட பல கோவில்களில் அம்மனுக்கு திரவிய பொடி மாவு பொடி மஞ்சள் சந்தனம் இளநீர் தேன் தயிர் பால் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்கள் வழிபட்டனர் .
கங்கைகொண்ட சோழபுரம் துர்க்கை அம்மன், ஜெயங்கொண்டம் சமயபுரம் மாரியம்மன் ஆகிய கோவில்களுக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.ஜெயங்கொண்டத்தில் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் ஆபத்து காத்த விநாயகர் கோவிலில் இருந்து பால்குடம் எடுத்து அண்ணா சிலை நான்கு ரோடு கும்பகோணம் ரோடு வழியாக கோவிலை சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர்.
கங்கை கொண்ட சோழபுரத்தில் நாச்சியார் குளத்திலிருந்து பால் குடங்களை வைத்து பூஜை செய்து பின்னர் ஊர்வலமாக எடுத்து ராஜவீதி வழியாக சென்று பிரகதீஸ்வரர் கோவிலில் உள்ளே உள்ள துர்க்கை அம்மனுக்கு அபிஷேகம் செய்து நேர்த்திக்கடனை செலுத்தினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu