ஜெயங்கொண்டம் பகுதியில் ஏரியில் மூழ்கி 2 முதியவர்கள் உயிரிழப்பு
ஜெயங்கொண்டம் அருகே ஏரியில் மூழ்கி உயிரிழந்த ஒரு முதியவரின் உடல் மீட்கப்பட்டது.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள அணைக்கரை வடவர் ஆற்றில் கஞ்சங்கொல்லை அருகே அடையாளம் தெரியாத 55 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் மிதப்பதாக காலையில் அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற மீன்சுருட்டி காவல்துறையினர் தீயணைப்பு துறை உதவியுடன் சடலத்தை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதேபோல் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கல்லாத்தூர் கிராமம் தெற்கு முதலியார் தெருவைச் சேர்ந்தவர் சங்கர். 85 வயதானஇவர் இயற்கை உபாதை கழித்து விட்டு அதே பகுதியில் உள்ள கேணிக்கரை திருக்குளத்தில் கால் கழுவ இறங்கிய போதுஎதிர்பாராதவிதமாக தவறி விழுந்து ஏரியில் மூழ்கி பலியானார்.அவரது உறவினர்கள் நேற்று இரவு பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.காலையில் ஏரிக்கு வந்தவர்கள் பார்த்து ஏரியில் பிணம் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஜெயங்கொண்டம் போலீசார் நேரில் சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu