கடியாங்குளம் வீரானார் கோவில் இரண்டு கலசங்கள் திருட்டு

கடியாங்குளம் வீரானார் கோவில் இரண்டு கலசங்கள் திருட்டு
X

கடியாங்குளம் வீரானார் கோவிலில் இரண்டு கலசங்கள் திருட்டு போனது குறித்து ஜெயங்கொண்டம் போலிசார் விசாரனை நடத்தி வருகின்றனர்


கோயில் பூசாரி அளித்த புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்
கடியாங்குளம் வீரானார் கோவிலில் இரண்டு கலசங்கள் திருட்டு போனது குறித்து ஜெயங்கொண்டம் போலிசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் கீழத்தெரு கடியாங்குளம் ஏரிக்கரை முன்பு உள்ளது வீரானார் கோவில். இக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். சுமார் 30 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலில் கடந்த ஆடி வெள்ளியில் போது பக்தர்கள் ஏராளமானோர் சாமி தரிசனம் செய்தனர். இந்நிலையில், இன்றைக்கு கோயிலுக்கு வந்த பக்தர் ஒருவர் கோயில் கோபுரத்தில் இருந்த இரண்டு கலசங்கள் காணாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து, கோயில் பூசாரி செல்வராஜுக்கு தகவல் கொடுத்துள்ளனர். கோயில் பூசாரி செல்வராஜ் அளித்த புகாரின் பேரில், ஜெயங்கொண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

இரவில் மர்ம நபர்க,ள் கோயிலுக்கு அருகே உள்ள கொட்டகையில் கொசுவத்தி மற்றும் ஸ்டாண்ட் வைத்து படுத்து தூங்கி இருந்ததாக தெரிகிறது. கோயில் கொட்டகையில் 2 கொசுவர்த்தி மற்றும் ஸ்டேன்ட் இருந்தது. திருடு போன செப்பு கலம் சுமார் 1.1/2 அடி உயரமுள்ளது. கலசங்களின் மதிப்பு சுமார் 10 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது. கோயில் கலசம் திருட்டு போன சம்பவம் அப்பகுயில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!