/* */

பாப்பாக்குடி ஊராட்சி கிராமசபை கூட்டத்தில் கண்ணன் எம்.எல்.ஏ. பங்கேற்பு

பாப்பாக்குடி ஊராட்சி சிறப்பு கிராம சபை கூட்டத்தில் ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. கண்ணன் கலந்து கொண்டார்.

HIGHLIGHTS

பாப்பாக்குடி ஊராட்சி கிராமசபை கூட்டத்தில் கண்ணன் எம்.எல்.ஏ. பங்கேற்பு
X
பாப்பாக்குடி ஊராட்சி கிராமசபை கூட்டத்தில் கண்ணன் எம்.எல்.ஏ. பங்கேற்றார்.

ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியம், பாப்பாக்குடி ஊராட்சியில், தேசிய ஊராட்சிகள் தினத்தை முன்னிட்டு நடைப்பெற்ற நீடித்த வளர்ச்சிகள் குறித்த,"சிறப்பு கிராம சபைக் கூட்டம்" நடைபெற்றதில், ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

இக்கூட்டத்தில் எம்.எல்.ஏ. க.சொ.க.கண்ணன் பேசுகையில்,

இந்த ஊராட்சியில் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றும் வகையில் 3 இலக்குகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதன்படி முதல் இலக்கு சுத்தமான குடிநீர், சுகாதாரமான காற்று,நீர் நிறைந்த கிராமம் ஆகும். ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பத்திற்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு குடிநீர் இணைப்பு வழங்க முடியாத குடும்பத்தினருக்கு சிறுமின்விசை தொட்டி,மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் போர்வெல் அமைத்து தேவையான குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. அரியலூர் மாவட்டத்தைப் பொறுத்த வரையில் பல்வேறு குடிநீர் திட்டங்களின் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் முழுமையாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கிராம மக்கள் குடிநீர் வீணாவதை தவிர்த்து,சிக்கனமாக குடிநீரை பயன்படுத்த வேண்டும். தங்களது பகுதியில் உள்ள நீர்தேக்க தொட்டியில் வீணாக குடிநீர் செல்வதை தடுத்து நீரை சிக்கனமாகவும் தேவைக்கேற்பவும் பயன்படுத்த வேண்டும்.

இரண்டாவது இலக்கு சுத்தமான பசுமையான கிராமம் என்பது பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் தவிர்த்தல் வேண்டும். மேலும் தமிழக அரசு தற்பொழுது மீண்டும் மஞ்சப்பை இயக்கத்தை கொண்டு வந்துள்ளது. எனவே பொதுமக்கள் அனைவரும் பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்த்து மஞ்சப்பை மூலம் தங்களுக்கு தேவையான பொருட்களை கடைகளில் வாங்க வேண்டும்.

மூன்றாவது இலக்கு குழந்தைகள் நேய ஊராட்சி என்பது குழந்தைகளை முறையாக பராமரிக்க வேண்டும் என்பதாகும். இந்த மூன்று இலக்குகளையும் வரும் இரண்டு ஆண்டுகளுக்குள் முடிக்க வேண்டும். இப்பணிகளின் முன்னேற்றம் குறித்து அடுத்து வரக்கூடிய கிராம சபை கூட்டங்களில் எடுத்து விவாதிக்க வேண்டும் என்றார்.

இந்நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாகரன் (வட்டார ஊராட்சி), ஊராட்சி மன்ற தலைவர் ஆஷாவினோத், துணைத்தலைவர் குமார், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தமிழரசன், கிளை செயலாளர்கள் பட்டுசெல்வம், வேல்முருகன், கல்யாணம், அன்பழகன், பிரதிநிதி சம்பத் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள்,கழக முன்னோடிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 24 April 2022 1:46 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஒட்டிய உறவாக வந்த உடன்பிறந்தோர் தின வாழ்த்துகள்..!
  2. வீடியோ
    SavukkuShankar-ரை அவமதித்த பெண் காவலர்கள் !#seeman #seemanism...
  3. வீடியோ
    Vetrimaaran சாதி இயக்குனர் Seeman சொன்ன பதில் !#seeman #seemanism...
  4. லைஃப்ஸ்டைல்
    பிறந்தநாளை கொண்டாடுவோம் வாங்க..!
  5. நாமக்கல்
    வெளிநாடுகளில் நர்சிங் வேலைக்கு செல்பவர்கள், அந்நிய மொழி பயிற்சி பெற...
  6. நாமக்கல்
    போதமலைக்கு ரூ. 19.57 கோடி மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணி :...
  7. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான உடல் திடத்தைப் பெற இத ஃபாலோ பண்ணுங்க..!
  8. ஆன்மீகம்
    பரசுராம் ஜெயந்தி 2024 - நாள், நேரம், சிறப்புகள் என்னென்ன தெரியுமா?
  9. ஈரோடு
    ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் ஆய்வு
  10. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே ,தென்கரை உச்சி மாகாளியம்மன் ஆலய விழா..!