குறுவை சாகுபடி இடுபொருட்களை ஜெயங்கொண்டம் எம்எல்ஏ கண்ணன் வழங்கினார்

குறுவை சாகுபடி இடுபொருட்களை ஜெயங்கொண்டம் எம்எல்ஏ கண்ணன் வழங்கினார்
X

குறுவை சாகுபடி தொகுப்புதிட்டதின் கீழ் இடுபொருட்களை ஜெயங்கொண்டம் எம்எல்ஏ க.சொ.க.கண்ணன் வழங்கினார்.

பொன்னாறு பாசன டெல்டா பகுதி விவசாயிகள் 1050 பயனாளிகளுக்கு, இடுபொருட்களை ஜெயங்கொண்டம் எம்எல்ஏ கண்ணன் வழங்கினார்.

தமிழக முதல்வர் ஆனைக்கினங்க, தா.பழூர் ஒன்றியம்,கோடாலிகருப்பூரில், குறுவை சாகுபடி தொகுப்புதிட்டதின் கீழ் இடுபொட்கள் வழங்கும் நிகழ்ச்சி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க வளாகத்தில் நடைப்பெற்றது. இதில் பொன்னாறு பாசன டெல்டா பகுதி விவசாயிகள் 1050 பயனாளிகளுக்கு, உரம் வழங்கும் நிகழ்ச்சில் கலந்துக்கொண்டு, வேளாண் பெருங்குடி மக்களுக்கு இடுபொருட்களை ஜெயங்கொண்டம் எம்எல்ஏ க.சொ.க.கண்ணன் வழங்கி, திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் தா.பழூர் வேளாண்மை உதவி இயக்குனர் கோ.அசோகன், வேளாண்மை அலுவலர் மற்றும் உதவி அலுவலர்கள் சி.செல்வக்குமார், சிவக்குமார், செல்வபிரியா, கூட்டுறவுசங்க செயலாளர் எம்.இரவிச்சந்திரன், மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் சுதா இளங்கோவன், கூட்டுறவு சங்கத்தலைவர் கிருஷ்ணமூர்த்தி, துணைத்தலைவர் தங்க பிரகாசம் மற்றும் விவசாயிகள் கலந்துக்கொண்டனர்.


Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!