அதிகரித்து வரும் கொரோனோ தொற்று

அதிகரித்து வரும் கொரோனோ தொற்று
X
ஜெயங்கொண்டம் பகுதியில் தற்காலிக சிறப்பு சிகிச்சை மையம்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் தற்போது 220 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினந்தோறும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் போதிய படுக்கை இடவசதி பற்றாக்குறை ஏற்பட்டது.

அரசு மருத்துவமனையில் குறைந்த பாதிப்பு தொற்று உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். தீவிர சிகிச்சைதேவைப்படுவோர் திருச்சி அரியலூர் போன்ற வெளிமருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

இதனையடுத்து அரசு மருத்துவமனையில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டதால் தற்காலிகமாக ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர்களின் 3- விடுதிகள் தற்காலிக சிகிச்சை மையங்களாக மாற்றப்பட்டுள்ளன.

அம்மையத்தில் 91 - நபர்களுக்கு படுக்கை வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு சிகிச்சை மையத்தை அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்னா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு சத்தான உணவு, உரிய அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளனவா? என்பதையும், சிறப்பு சிகிச்சை மையத்தில் சித்த மருத்துவர்களை கொண்டு நோயாளிகளுக்கு தகுந்த ஆலோசனைகளை வழங்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.



Tags

Next Story