ஜெயங்கொண்டம் மக்கள் தொடர்பு முகாமில் 126 பயனாளிகளுக்கு நல திட்டஉதவிகள்

ஜெயங்கொண்டம் மக்கள் தொடர்பு முகாமில் 126 பயனாளிகளுக்கு நல திட்டஉதவிகள்
X
ஜெயங்கொண்டம் மக்கள் தொடர்பு முகாமில் நலத்திட்ட உதவிகளை கண்ணன் எம்.எல்.ஏ. வழங்கினார்.
ஜெயங்கொண்டம் மக்கள் தொடர்பு முகாமில் 126 பயனாளிகளுக்கு ரூ.26 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை எம்.எல்.ஏ. கண்ணன் வழங்கினார்.

ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி, ஜெயங்கொண்டம் ஒன்றியம், இளையபெருமாள்நல்லூர் கிராமத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிற்கிணங்க "மக்கள் தொடர்பு முகாம்" நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் ம.ச.கலைவாணி தலைமையில், வருவாய் கோட்டாட்சியர் சா.பரிமளம் வரவேற்றார்.

இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் வாழ்த்துரை வழங்கினார். 126 பயணாளிகளுக்கு ரூ.25,84,847 மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் ஒன்றிய செயலாளர், அட்மா வேளாண் குழு தலைவர் மணிமாறன், ஊராட்சி மன்ற தலைவர் ராஜ.வெங்கடேசன், ஒன்றிய குழு உறுப்பினர் சுப்பு(எ)சுப்பிரமணியன் மற்றும் அரசின் அனைத்து துறை அதிகாரிகளும் கலந்துகொண்டு திட்ட விளக்க உரைறினார்.

வட்டாட்சியர் க.ஸ்ரீதர் நன்றியுரை கூறினார். இம்முகாமில் விவசாயிகளும் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.

Tags

Next Story