கலைஞர் 4ம்ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு ஜெயங்கொண்டம் எம்எல்ஏ மலரஞ்சலி

கலைஞர் 4ம்ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு ஜெயங்கொண்டம் எம்எல்ஏ மலரஞ்சலி
X

மலர் அஞ்சலி செலுத்திய எம்எல்ஏ கண்ணன் மற்றும் திமுகவினர்.

முத்தமிழ் அறிஞர் கலைஞரின் 4-ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு ஜெயங்கொண்டம் எம்எல்ஏ கண்ணன் மலரஞ்சலி செலுத்தினார்.

ஆண்டிமடம் வடக்கு மற்றும் தெற்கு ஒன்றிய கழகம் சார்பில், ஆண்டிமடம் கடைவீதியில், முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் 4-ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, ஒன்றிய கழக செயலாளர்கள் தர்மதுரை, முருகன் ஆகியோர் தலைமையிலும், சட்டமன்ற உறுப்பினர் கண்ணன் முன்னிலையிலும், ஊர்வலமாக சென்று திருவுருவ படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினர்.

இதில் மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் கலியபெருமாள், மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் பானுமதி, மகளிரணி துணை அமைப்பாளர் ராணி, மாவட்ட பிரதிநிதிகள் உதயகுமார், சிவஜோதி, பாலு, ஒன்றிய குழு உறுப்பினர்கள் சேவியர் சஞ்சீவி குமார், தனசேகர், பத்மநாபன், தன்ராஜ், இளைஞரணி அமைப்பாளர் செந்தில், சதீஷ், துணை அமைப்பாளர்கள் பாலா, இளங்கோவன், ராஜசேகர், ராஜ்குமார், கணபதி மற்றும் கழக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story