ஜெய்பீம் பட விவகாரம்: ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் பாமகவினர் மனு

ஜெய்பீம் பட விவகாரம்: ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் பாமகவினர் மனு
X

ஜெய்பீம் பட விவகாரம் குறித்து ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் பாமக நகர செயலாளர் மாதவன் தலைமையில் புகார் மனு அளித்தனர்.


ஜெய்பீம் பட விவகாரம் குறித்து ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் பாமக நகர செயலாளர் மாதவன் தலைமையில் புகார் மனு அளித்தனர்.

ஜெய்பீம் பட விவகாரம் குறித்து ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் பாமக நகர செயலாளர் மாதவன் தலைமையில் புகார் மனு அளித்தனர். அந்த மனுவில், சமீபத்தில் நடிகர் சூர்யா நடித்த ஜெய் பீம் திரைப்படம் விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற உண்மைச் சம்பவத்தை பின்னணியாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் வன்னியர்களை இழிவுபடுத்தும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டு மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

எனவே இந்த படத்தை தயாரித்த நடிகர் சூர்யா, நடிகை ஜோதிகா, படத்தின் இயக்குனர் ஞானவேல் ஆகியோர் மீது சாதி பிரிவினை ஏற்படுத்தும் வகையில் படம் எடுத்ததாக வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என மனுவில் கூறியுள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் நகர தலைவர் ரெங்கநாதன், மாவட்ட துணைத்தலைவர் சுதாகர், இளைஞரணி தலைவர் சுப்பிரமணி, நகர துணை செயலாளர் பாண்டியன், நகர துணைத் தலைவர் சிலம்பு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!