ஜெயங்கொண்டம் நகராட்சி துணைத்தலைவராக கருணாநிதி போட்டியின்றி தேர்வு

ஜெயங்கொண்டம் நகராட்சி துணைத்தலைவராக கருணாநிதி போட்டியின்றி தேர்வு
X
ஜெயங்கொண்டம் நகராட்சி துணை தலைவர் கருணாநிதி.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சி துணைத்தலைவராக தி.மு.க.வை சேர்ந்த கருணாநிதி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

ஜெயங்கொண்டம் நகராட்சியில் உள்ள 21 வார்டுகளில் தி.மு.க. கூட்டணியில் 13 பேரும், பா.ம.க.வில் 4 பேரும், அ.தி.மு.க.வில் நான்கு பெரும் வெற்றி பெற்றனர். இன்று ஜெயங்கொண்டம் நகராட்சிக்கான துணைத்தலைவர் தேர்தல் நகர்மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் தி.மு.க.வை சேர்ந்த கருணாநிதி துணைத்தலைவர் பதவிக்கு மனு தாக்கல் செய்தார். கூட்டரங்கில் தி.மு.க. கூட்டணியை சேர்ந்த 13 கவுன்சிலர்களும், பா.ம.க.வை சேர்ந்த 4 கவுன்சிலர்கள் மட்டுமே வருகை தந்திருந்தனர். அ.தி.மு.க.வைச் சேர்ந்த 4 கவுன்சிலர்கள் கூட்ட அரங்கிற்கு வரவில்லை.

இதனை அடுத்து ஜெயங்கொண்டம் நகராட்சி துணைத்தலைவராக தி.மு.க.வை சேர்ந்த கருணாநிதி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக நகராட்சி ஆணையர் சுபாஷினி அறிவித்தார்.

நகராட்சித் துணைத்தலைவராக தேர்வு செய்யப்பட்ட கருணாநிதிக்கு நகராட்சி கவுன்சிலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

Tags

Next Story
ai as the future