ஜெயங்கொண்டம் நகராட்சி 16-வது வார்டில் 9.35 சதவீதம் வாக்குப்பதிவு

ஜெயங்கொண்டம் நகராட்சி 16-வது வார்டில் 9.35 சதவீதம் வாக்குப்பதிவு
X

வாக்கு செலுத்துவதற்காக வாக்காளர்கள் காத்து நின்றனர்.

ஜெயங்கொண்டம் நகராட்சி 16-வது வார்டில் காலை 9மணி வரை மொத்தம்155 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். 9.35 சதவீதவாக்குப்பதிவு

ஜெயங்கொண்டம் நகராட்சி 16-வது வார்டில் வாக்குப்பதிவில் காலை 9 மணி வரை 89 ஆண் வாக்காளர்கள் மற்றும் 66 பெண் வாக்காளர்கள் என மொத்தம்155 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். 9.35 சதவீத வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகராட்சி நகர்புற உள்ளாட்சி தேர்தலில் வார்டு எண்.16-க்கான வாக்குச்சாவடி 16 (ஆண்), 16 (பெண்) ஆகிய இரண்டு வாக்குச்சாவடிகளுக்கான சுயேட்சை வேட்பாளர் விஜயலெட்சுமி என்பவருக்கு ஒதுக்கப்பட்ட சின்னமான மறைதிருக்கி (ஸ்பேனர்)-க்கு பதிலாக திருகுஆணி (ஸ்குரு) என தவறுதலாக பதியப்பட்டு நேற்றுமுன்தினம் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து வேட்பாளர் விஜயலெட்சுமி தேர்தல் ஆணையத்திற்கு புகார்மனு அளித்தார்.

இதன்பேரில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் ஜெயங்கொண்டம் நகராட்சி நகர்புற உள்ளாட்சி தேர்தலில் வார்டு எண்.16-க்கான வாக்குச்சாவடி 16 (ஆண்), 16 (பெண்) ஆகிய இரண்டு வாக்குச்சாவடிகளுக்கு இன்று மறுதேர்தல் நடத்த ஆணையிட்டது.

இந்த மறு வாக்குப்பதிவில் ஜெயங்கொண்டம் நகராட்சி 16வது வார்டில் பிரதான கட்சிகளில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டு வேட்பாளராக இதயராணி கைசின்னத்திலும், அ.தி.மு.க. வேட்பாளராக மலர்விழி இரட்டைஇலை சின்னத்திலும், பாமக வேட்பாளராக இந்திராகாந்தி மாம்பழம் சின்னத்திலும், அ.ம.மு.க. வேட்பாளராக ரோஸ்மா பிரசர்குக்கர் சின்னத்திலும், சுயேட்சை வேட்பாளர்களாக விஜயலெட்சுமி மறைமுருக்கி(ஸ்பேனர்) சின்னத்திலும், சுந்தராபாய் தீப்பெட்டி சின்னத்திலும் சேர்த்து 6 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். ஸ்டேட்பேங்க் காலனி, சீனிவாசாநகர், இந்திராநகர், ஜோதிபுரம், கருப்பையா நகர், சிதம்பரம்ரோடு, கல்விகிராமம் உள்ளிட்ட பகுதிகளை அடங்கிய 16வது வார்டில் 1657 வாக்காளர்கள் உள்ளனர்.

அதன்படி, இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜெயங்கொண்டம் நகராட்சியில் 16வது வார்டில் உள்ள 800 ஆண்வாக்காளர்கள் மற்றும் 857 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 1657 வாக்காளர்களில், காலை 9 மணி வரை 89 ஆண் வாக்காளர்கள் மற்றும் 66 பெண் வாக்காளர்கள் என மொத்தம்155 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். காலை 9 மணி நிலவரப்படி 9.35 சதவீத வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.

Tags

Next Story
ai based healthcare startups in india