ஜெயங்கொண்டம் நகராட்சி 16-வது வார்டில் 24.6 சதவீத வாக்குப்பதிவு
ஜெயங்கொண்டம் நகராட்சி 16வது வார்டிற்கு இன்று மறு வாக்குப்பதிவு நடந்தது.
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகராட்சி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வார்டு எண்.16-க்கான வாக்குச்சாவடி 16 (ஆண்), 16 (பெண்) ஆகிய இரண்டு வாக்குச்சாவடிகளுக்கான சுயேட்சை வேட்பாளர் விஜயலெட்சுமி என்பவருக்கு ஒதுக்கப்பட்ட சின்னமான மறைதிருக்கி (ஸ்பேனர்)-க்கு பதிலாக திருகுஆணி (ஸ்குரு) என தவறுதலாக பதியப்பட்டு நேற்றுமுன்தினம் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து வேட்பாளர் விஜயலெட்சுமி தேர்தல் ஆணையத்திற்கு புகார்மனு அளித்தார்.
இதன்பேரில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் ஜெயங்கொண்டம் நகராட்சி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வார்டு எண்.16-க்கான வாக்குச்சாவடி 16 (ஆண்), 16 (பெண்) ஆகிய இரண்டு வாக்குச்சாவடிகளுக்கு இன்று மறுதேர்தல் நடத்த ஆணையிட்டது.
இந்த மறு வாக்குப்பதிவில் இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜெயங்கொண்டம் நகராட்சியில் 16வது வார்டில் உள்ள 800 ஆண்வாக்காளர்கள் மற்றும் 857 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 1657 வாக்காளர்களில், காலை 11 மணி வரை 216 ஆண் வாக்காளர்கள் மற்றும் 193 பெண் வாக்காளர்கள் என மொத்தம்409 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். 24.6 சதவீத வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu