ஜெயங்கொண்டம் நகராட்சி தேர்தலில் 21-வார்டு பதவிகளுக்கு 108 பேர் போட்டி
வாக்காளரிடம் ஆதரவு திரட்டும் வேட்பாளர்.
ஜெயங்கொண்டம் நகராட்சியில் 21 வார்டுகளில் மொத்தவாக்காளர்களின் எண்ணிக்கை 28 ஆயிரத்து 1 ஆகும். இதில் 13ஆயிரத்து 481 ஆண் வாக்காளர்களும், 14 ஆயிரத்து 520 பெண் வாக்காளர்களும் உள்ளனர். வார்டுகள் 2 மற்றும் 18ல் தாழ்த்தப்பட்டோரில் பொதுவாகவும், வார்டுகள் 9 மற்றும்10ல் தாழ்த்தப்பட்டோரில் பெண்களுக்கும், வார்டுகள் 4,7,13,15,16,17,19,20,21 பொதுவான பெண்களுக்கும், வார்டுகள் 1,3,5,6,8,11,12,14 ஆண், பெண் இரு பாலினத்திற்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வார்டு 1ல் 6 பேர், 2ல் 5 பேர், 3ல் 6 பேர், 4ல் 7 பேர், 5ல் 8 பேர், 6ல் 6 பேர், 7ல் 8 பேர், 8ல்8 பேர், 9ல் 9 பேர், 10ல் 9 பேர்,11ல் 5 பேர், 12ல் 9 பேர், 13ல் 9 பேர், 14ல் 4 பேர், 15ல் 6 பேர், 16ல் 8 பேர், 17ல் 7 பேர், 18ல் 3 பேர், 19ல் 6 பேர், 20ல் 7 பேர், 21ல் 7 பேர் என மொத்தம் 144 பேர் மனுத்தாக்கல் செய்து இருந்தனர்.
மனோபரிசுத்தம் பகுதியை சேர்ந்த ஒருவேட்பாளர் கூடுதலாக இரண்டு மனுக்களும், இரண்டு வேட்பாளர்கள் கூடுதலாக ஒரு மனுக்களையும் தாக்கல் செய்திருந்தனர். இதனால் இந்த 4 மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன. பல்வேறு காரணங்களை கூறி 32பேர் தங்களின் மனுக்களை வாபஸ் பெற்றனர். ஜெயங்கொண்டம் நகராட்சி தேர்தலில் 21 வார்டுகளுக்கு 108 பேர் போட்டியிடுவது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதில் 21 வார்டுகளிலும் அ.தி.மு.க.வும், பா.ம.க.வும் தனித்தனியாக போட்டியிடுகின்றனர். தி.மு.க. 18 வார்டுகளில் போட்டியிடுகின்றனர். வி.சி.க. கட்சி 2 வார்டுகளிலும், காங்கிரஸ் ஒரு வார்டிலும் போட்டியிடுகின்றன. அ.ம.மு.க. 19 வார்டுகளில் போட்டியிடுகின்றனர். பா.ஜ.க. 8 வார்டுகளில் பெண் வேட்பாளர்களை மட்டும் முன்னிலைப்படுத்தியுள்ளது.
தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகி மார்க்சிஸ்ட் இரண்டு வார்டுகளில் தனித்து நிற்கிறது. சுயேட்சைகள் 16 பேர் களத்தில் உள்ளனர். வெற்றிபெற வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் ஒவ்வொரு கட்சியினரும் பிரச்சாரத்தில் தங்கள் கவனத்தை திசை திருப்பியுள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu