வங்கிகளுக்கு முன்பு மக்கள் கூட்டத்தை உடனடியாக கலைத்த நகராட்சி நிர்வாகம்

வங்கிகளுக்கு முன்பு மக்கள் கூட்டத்தை உடனடியாக கலைத்த நகராட்சி நிர்வாகம்
X
ஜெயங்கொண்டம் சன்னதி தெருவில் வங்கிகளுக்கு முன்பு கூடிய வாகனங்கள் மற்றும் மக்களை ஒழுங்குபடுத்திய நகராட்சி நிர்வாகம்.

ஜெயங்கொண்டம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இதுவரை 86-க்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் சிலர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஜெயங்கொண்டம்,சன்னதி தெருவில் சுமார் ஐந்துக்கு மேற்பட்ட தனியார் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் செயல்பட்டு வருகிறது. அனைத்து வங்கிகளுக்கும் அநேக வாடிக்கையாளர்கள் வந்து செல்கின்றனர்..

கடந்த ஏப்ரல் 28-ந்தேதி சன்னதி தெருவில், சிட்டி யூனியன் வங்கி மேலாளர் ஒருவருக்கும், அதே தெருவில் வசிக்கும் ஆடிட்டர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதியானது.இந்நிலையில் அரியலூர் மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் ஜெயங்கொண்டம் நகராட்சி ஆணையர் சுபாஷினி அறிவுறுத்தலின் படி நகராட்சி மூலம் அப்பகுதியில் மேலும் கொரோனா தொற்று பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த மே -1 ந்தேதி முதல் 14 நாட்களுக்கு அந்த பகுதியை தடை செய்யப்பட்ட பகுதியாக நகராட்சி நிர்வாகத்தினர் அறிவித்து, அறிவிப்பு பலகை மற்றும் தடுப்பு வைத்து அடைத்தனர்.

மேலும் வங்கிகளின் சேவையை ஆன்லைன் மூலம் செய்யவும் குறைந்த எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்கள் மட்டுமே வங்கிகள் உள்ளே அனுமதிக்க வேண்டும் என நகராட்சி துறையினர் அறிவுறுத்தியிருந்தனர்.தொடர்ந்து வங்கிகளுக்கு உள்ளே கிருமிநாசினி தெளிப்பது, வாடிக்கையாளர்களுக்கு கிருமிநாசினி கொடுப்பது, முக கவசம் அணிந்து குறைந்த எண்ணிக்கையிலான நபர்களை மட்டுமே உள்ளே அனுமதிப்பது உள்ளிட்ட விதிமுறைகளையும் கடைபிடிக்க அறிவுறுத்தியிருந்தனர். அதனை வங்கி நிர்வாகம் முறையாக கடைபிடித்து வந்தது.

இந்நிலையில் திடீரென இன்று தடுப்புகளை மீறி அநேக 2 சக்கர வாகனங்கள் ஜெயங்கொண்டம் சன்னதி தெருவில் அந்தந்த வங்கிகளுக்கு முன்னால் பெரும் கூட்டம் கூடியதுடன். மேலும் வாகனப் பெருக்கமும் அதிகரித்திருந்தது. இதனால் தொற்று பரவும் அபாயம் இருப்பதாக கூறி நகராட்சி ஆணையர் சுபாஷினி அறிவுறுத்தலின் பேரில் நகராட்சி சுகாதார ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன் மற்றும் நகராட்சி பொது பணி மேற்பார்வையாளர் ராமகிருஷ்ணன் தலைமையிலான நகராட்சி பணியாளர்கள் விரைந்து சென்று அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அனைத்து வாகனங்களையும் அப்புறப்படுத்தி வெளியேற்றினர்.

பின்னர் நான்கு திசைகளிலும் உள்ள தடுப்புகளை பலப்படுத்தினர். தொடர்ந்து வங்கி ஊழியர்களிடம் மத்திய, மாநில அரசு கூறும் கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்கவும், வாடிக்கையாளர்களும் கடைபிடிக்க அறிவுறுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர். தொடர்ந்து நகராட்சி நிர்வாகத்தினர் மூலம் வங்கிகளுக்கு உள்ளேயும், வெளியேயும், ஏடிஎம் மையங்கள் உள்ளேயும், மையங்களுக்கு வெளியிலும், கதவு கைப்பிடிகளிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தற்பொழுது அந்த பகுதி முழுவதும் வாகனங்கள் அகற்றப்பட்டு வாகனப் பெருக்கம் மற்றும் மக்கள் கூட்டம் ஏதும் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது

Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil