ஜெயங்கொண்டத்தில் பாலம் கட்டும் பணி; எம்எல்ஏ கண்ணன் துவக்கம்

ஜெயங்கொண்டத்தில் பாலம் கட்டும் பணி;  எம்எல்ஏ கண்ணன் துவக்கம்
X

பாலம் கட்டும் பணியை துவக்கி வைக்கும் எம்எல்ஏ கண்ணன்.

உதயநத்தம் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, சிறு பாலம் கட்டும் பணியினை ஜெயங்கொண்டம் எம்எல்ஏ கண்ணன் துவங்கி வைத்தார்.

ஜெயங்கொண்டம் அருகே நீர்த்தேக்கத்தொட்டி, பாலம் கட்டும் பணிகளை ஜெயங்கொண்டம் எம்எல்ஏ கண்ணன் தொடங்கி வைத்தார்.

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள தா.பழூர் ஒன்றியம் உதயநத்தம் ஊராட்சி வடக்கு தெருவில் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ரூ. 7.60 லட்சம் மதிப்பீட்டிலும், சிறு பாலம் ரூ.6.00 லட்சம் மதிப்பீட்டிலும் கட்டும் பணியினை ஜெயங்கொண்டம் எம்எல்ஏ க.சொ.க.கண்ணன் துவங்கி வைத்தார்.

உடன் ஊராட்சி ஒன்றிய உதவி பொறியாளர் ஜி.விஜயன், ஒன்றியகுழு உறுப்பினர் பானுமதி பூபதி, ஊராட்சி மன்ற தலைவர் மல்லிகா வீரப்பன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் வி.இராஜ்மோகன், ஊராட்சி மன்ற செயலாளர் க.இளங்கோவன் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!