ஒலிம்பிக் போட்டியில் பங்குபெறும் மாற்றுத்திறனாளி தடகள வீராங்கனையை வாழ்த்திய எம்எல்ஏ

ஒலிம்பிக் போட்டியில் பங்குபெறும் மாற்றுத்திறனாளி தடகள வீராங்கனையை வாழ்த்திய  எம்எல்ஏ
X

மாற்றுத்திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள உள்ள தடகள வீராங்கனை சிவகாமியை  ஜெயங்கொண்டம் எம்எல்ஏ வாழ்த்தினார்.

டோக்கியோவில் நடக்கும் ஒலிம்பிக் போட்டியில் பங்கு பெறும் மாற்றுத்திறனாளி தடகள வீராங்கனை சிவகாமியை ஜெயங்கொண்டம் எம்எல்ஏ கண்ணன் வெற்றிப்பெற வாழ்த்தினர்.

அரியலூர் மாவட்ட மாற்று திறனாளி சங்க தலைவி சிவகாமி, டோக்கியோவில் நடைபெறும் மாற்று திறனாளிகளுக்கான ஒலிம்பிக் தடகளப் போட்டியில் பங்குபெற, 73-வது வீராங்கனையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

அதுசமயம் டெல்லியில் ஜுன் 15,16 ஆகிய தேதிகளில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கான முன்னோட்டத்தில் பங்கு பெற உள்ளார். இதனையொட்டி ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் எம்எல்ஏ க.சொ.க.கண்ணனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அவருக்கு சால்வை அணிவித்த எம்எல்ஏ கண்ணன், வெற்றிபெற வாழ்த்துக்களை தெரிவித்தார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!