ஜெயங்கொண்டம் : தூய்மைப்பணியாளர்கள் ஊதியம் வழங்காததை கண்டித்து போராட்டம்

ஜெயங்கொண்டம் : தூய்மைப்பணியாளர்கள் ஊதியம் வழங்காததை கண்டித்து போராட்டம்
X

சம்பள பிரச்சினை தொடர்பாக போராட்டம் நடத்தியவர்களுடன்  பேச்சுவார்த்தை நடந்தது.

ஊதியம் வழங்காததை கண்டித்து வேலையை புறக்கணித்து மருத்துவமனை ஊழியர்கள் போராட்டம் நடத்தினர்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் 36 தூய்மைப் பணியாளர்கள் தனியார் நிறுவனம் மூலம் பணிக்கு அமர்த்தப்பட்டு பணி செய்து வருகின்றனர்.முன்பிருந்த தனியார் நிறுவனம் (Sumith) சில மாதங்களுக்கு முன்பு வேறொரு தனியார் நிறுவனத்திடம் (QPMS) ஒப்படைத்து விட்டது. அரசு மருத்துவமனையில் ஒரு மேலாளர் இரண்டு மேற்பார்வையாளர் ஆறு காப்பாளர்கள் ஒரு தோட்டக்காரர் இரண்டு சமையலறை இரண்டு தலைவர்கள் ஒரு கார்பென்டர் ஒரு பிளம்பர் ஒரு எலக்ட்ரீசியன் 17 ஹவுஸ் கீப்பர் என மொத்தம் முப்பத்தி ஆறு நபர்கள் பணியமர்த்தப்பட்டு பணி செய்து வருகின்றனர்.

இவர்களுக்கு ஏப்ரல் மாதம் ஊதியம் வழங்காததை கண்டித்து பணிக்கு செல்லாமல் வேலையை புறக்கணித்து மருத்துவமனை வெளியில் நின்று போராட்டத்தில் ஈடுபட்டதுடன் அவர்கள் அவர்களது நிறுவனத்தின் வாகனத்தை மறித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்திடம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் உஷா செந்தில்குமார் விசாரணை மேற்கொண்ட போது அவர்களுக்கு 11 ,12 ஆகிய தேதிகளில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவித்தனர்.போராட்டக்காரர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!