ஜெயங்கொண்டம் நகராட்சி தலைவராக விடுதலை சிறுத்தைகள் கட்சி சுமதி தேர்வு

ஜெயங்கொண்டம் நகராட்சி தலைவராக விடுதலை சிறுத்தைகள் கட்சி சுமதி தேர்வு
X

ஜெயங்கொண்டம் நகராட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த சுமதிசிவகுமார்.


அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு வி.சி. கட்சியைச் சேர்ந்த சுமதி சிவகுமார் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த சுமதி சிவகுமார் போட்டியின்றி தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

ஜெயங்கொண்டம் நகராட்சியில் உள்ள 21 வார்டுகளில் தி.மு.க. கூட்டணியில் 13 பேரும், பா.ம.க.வில் 4 பேரும், அ.தி.மு.க.வில் நான்கு பெரும் வெற்றி பெற்றனர். இன்று ஜெயங்கொண்டம் நகராட்சிக்கான தலைவர் தேர்தல் நகர் மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த சுமதி சிவக்குமார் தலைவர் பதவிக்கு மனு தாக்கல் செய்தார். கூட்டரங்கில் தி.மு.க. கூட்டணியை சேர்ந்த 13 கவுன்சிலர்களும், பா.ம.க.வை சேர்ந்த 4 கவுன்சிலர்கள் மட்டுமே வருகை தந்திருந்தனர். அ.தி.மு.க.வைச் சேர்ந்த 4 கவுன்சிலர்கள் கூட்ட அரங்கிற்கு வரவில்லை.

இதனையடுத்து ஜெயங்கொண்டம் நகராட்சி தலைவராக விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த சுமதி சிவக்குமார் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக நகராட்சி ஆணையர் சுபாஷினி அறிவித்தார்.

நகராட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்ட சுமதி சிவகுமாருக்கு நகராட்சி கவுன்சிலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

Tags

Next Story
இது தெரியாம போச்சே ,காலை எழுந்து வெந்நீர் பருகுவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா