மாணவர்களுக்கு இலவச மிதிவண்டிகளை ஜெயங்கொண்டம் எம்எல்ஏ வழங்கல்

மாணவர்களுக்கு இலவச மிதிவண்டிகளை ஜெயங்கொண்டம் எம்எல்ஏ வழங்கல்
X

தா.பழூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மாணவ, மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகளை சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் வழங்கினார்.


தா.பழூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மாணவ, மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகளை சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் வழங்கினார்.

ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி தா.பழூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட உதயநத்தம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 88 மாணவ, மாணவிகளுக்கும், கோடாலிகருப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 135 மாணவ, மாணவிகளுக்கும், தா.பழூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 137 மாணவ, மாணவிகளுக்கும், காரைக்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் 94 மாணவ, மாணவிகளுக்கும் இலவச மிதிவண்டிகளை சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் வழங்கினார்.

இந்நிகழ்வில் ஊராட்சி மன்ற தலைவர்கள் உதயநத்தம் மல்லிகா வீரப்பன், கோடாலிகருப்பூர் சுதா இளங்கோவன், தா.பழூர் கதிர்வேல், ஒன்றியகுழு உறுப்பினர்கள் இரா.அண்ணாதுரை, மண்டோதரி இராமையன், தலைமை ஆசிரியர்கள் உதயநத்தம் அன்புச்செல்வன், கோடாலிகருப்பூர் ரவிச்சந்திரன், தா.பழூர் காந்திமதி, காரைக்குறிச்சி ராஜேந்திரன், தா.பழூர் கிழக்கு ஒன்றிய திமுக நிர்வாகிகள் என்.ஆர்.இராமதுரை, எஸ்.சூசைராஜ், க.சாமிதுரை, அ.ராஜேந்திரன், இந்துமதி நடராஜன், த.நாகராஜன், எஸ்.ஆர்.தமிழ்ச்செல்வன், கோவி.சீனிவாசன், சி.கண்ணதாசன்,இரா.சங்கர், கே.எஸ்.ஆர்.கார்த்திக், ந.கார்த்திகைகுமரன், த.குணசீலன், க.சேகர்,மற்றும் இருபால் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!