ஜெயங்கொண்டம்:மத்திய அரசை கண்டித்து எம்.எல்.ஏ. தலைமையில் ஆர்ப்பாட்டம்

ஜெயங்கொண்டம்:மத்திய அரசை கண்டித்து எம்.எல்.ஏ. தலைமையில் ஆர்ப்பாட்டம்
X

தா.பழூர் அஞ்சல் அலுவலகம் முன் தி.மு.க.கூட்டணிக் கட்சியினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


ஜெயங்கொண்டம் அருகே மத்திய அரசை கண்டித்து கண்ணன் எம்.எல்.ஏ. தலைமையில் தி.மு.க. கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள தா.பழூர் அஞ்சல் அலுவலகம் முன்பு மத்திய அரசை கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. கண்ணன் தலைமை தாங்கினார்.

விவசாயிகளை வஞ்சிக்கும் மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரியும், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை கண்டித்தும், நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும், 100 நாள் வேலையில் சாதிவாரியாக வேலை, கூலி வழங்குவதை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்களை எழுப்பினர். இதில் முற்போக்கு கூட்டணி கட்சிகளை சேர்ந்த பிரமுகர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!