ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு ரூ.19.88 லட்சம் மருத்துவ உபகரணங்கள்
டால்மியா சிமெண்ட் நிறுவனத்தின் சார்பில் ரூ.19.88 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை அமைச்சர் சிவசங்கர் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு வழங்கினார்.
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு டால்மியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் ரூ.19 இலட்சத்து 88 ஆயிரத்து 734 மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை, மருத்துவமனை நிர்வாகத்திடம் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் இன்று வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.ரமண சரஸ்வதி மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சிவசங்கர் தெரிவித்ததாவது:-
தமிழ்நாடு முதலமைச்சரல் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு நடவடிக்கைகள் மூலம் கொரோனா பெருந்தொற்று தற்போது கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. மேலும், வரக்கூடிய காலங்களில் கொரோனா, டெங்கு உள்ளிட்ட நோய்தொற்றிலிருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் பெருநிறுவனங்களின் சார்பில் அரசு மருத்துவமனைகளுக்கு பல்வேறு மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் ஏழை, எளிய குடும்பங்களை சார்ந்த பொதுமக்களுக்கு உயர்தரத்திலான சிகிச்சைகளும் அளிக்கப்படுகிறது.
அதன் அடிப்படையில், டால்மியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு பாரா மானிடர் கருவி, தொலைநோக்கி கருவி, ஸ்டெச்சர், உறிஞ்சி கருவி, மருந்து உபகரண பெட்டி, அதிநவீன ஸ்டெச்சர் உள்ளிட்ட 9 வகையான 62 எண்ணிக்கையிலான கருவிகள் வழங்கப்பட்டது.
இதன் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் கிடைப்பதுடன், பொதுமக்களுக்கும் உயர்ந்த சிகிச்சை அளிக்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கோட்டாட்சியர் அமர்நாத், மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் உஷா, டால்மியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் துணை செயல் இயக்குநர் விநாயகமூர்த்தி, உதவி செயல் இயக்குநர் மகேஷ், முதன்மை பொது மேலாளர் ராபர்ட், துணை பொது மேலாளர்பாலசுப்பிரமணியன், உதவி பொது மேலாளர் சார்லஸ், வட்டாட்சியர் ஆனந்தன் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu