ரூ.3 கோடியில் விரிவுபடுத்தப்பட்ட ஜெயங்கொண்டம் பேருந்து நிலையம் திறப்பு

ரூ.3 கோடியில் விரிவுபடுத்தப்பட்ட ஜெயங்கொண்டம் பேருந்து நிலையம் திறப்பு
X

ஜெயங்கொண்டம்  பேருந்து நிலையத்தில் பஸ் சேவையை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்.


ஜெயங்கொண்டம் அறிஞர் அண்ணா பேருந்துநிலையத்தில் அமைச்சர் சிவசங்கர் குத்துவிளக்கேற்றி, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகராட்சி பேருந்து நிலையமானது 1987ஆம் ஆண்டு 0.82 ஏக்கர் பரப்பளவில் 29 எண்ணிக்கை கடைகள் உள்ளடக்கி கட்டப்பட்டு இருந்தது. இந்த பேருந்து நிலையத்தை உட்கட்டமைப்பு இடைவெளி நிரப்பும் நிதியின்கீழ் 36 கடைகள், கழிவறை வசதி, குடிநீர் வசதி மற்றும் பயணிகள் இளைப்பாறும் இடம் ஆகிய வசதிகளுடன் விரிவுபடுத்த ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, கட்டி முடிக்கப்பட்டது. விரிவாக்கம் செய்யப்பட்ட இந்த புதிய பேருந்து நிலையத்தை தமிழக முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று காணொலிக்காட்சி மூலம் திறந்து வைததார்.

இதனை தொடர்ந்து அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பார்வையிட்டு, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி, பேருந்து நிலையத்திற்குள் மக்கள் பயன்பாட்டிற்கு பேருந்து சேவையினை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.ரமண சரஸ்வதி, ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர்.

உடையார்பாளையம் கோட்டாட்சியர் அமர்நாத், ஜெயங்கொண்டம் நகராட்சி ஆணையர் சுபாஷினி, வட்டாட்சியர் ஆனந்தன், வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாகரன், போக்குவரத்துக்கழக கிளை மேலாளர் ராம்குமார், நகராட்சிப்பொறியாளர் சித்ரா மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!