பாஜகவினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

பாஜகவினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
X
பாஜக தலைவர் முருகன் மத்தியஅமைச்சராக பதவிஏற்றதை கொண்டாடும் வகையில், பாஜகவினர் பட்டாசுவெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.

பாஜக தலைவர் முருகன் மத்திய அமைச்சராக பதவி ஏற்றதை கொண்டாடும் வகையில், பாஜகவினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டது இதில் 43 பேர் புதிய அமைச்சர்களாக பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டனர். இந்நிலையில் மத்திய அமைச்சரவையில் தமிழக பாஜக தலைவராக இருந்த முருகன் மத்திய அமைச்சரவையில் வெளியுறவுத்துறை இணை அமைச்சராக பதவியேற்றார். தமிழக பாஜக தலைவர் முருகன் மத்திய அமைச்சராக பதவி ஏற்றதை கொண்டாடும் வகையில், ஜெயங்கொண்டத்தில் பாஜக மாவட்ட தலைவர் ஐயப்பன் தலைமையில், பாஜக வினர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். இதில் பாஜகவை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!