நடுவலூர் கிராமத்தில் மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி

நடுவலூர் கிராமத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி.
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள நடுவலூர் கிராமத்தில் மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டியை உடையார்பாளையம் கோட்டாட்சியர் பரிமளம் தொடங்கி வைத்தார். இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் அரியலூர், தஞ்சாவூர், பெரம்பலூர், கடலூர், மதுரை, சேலம், புதுக்கோட்டை, திருச்சி ,கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 650 காளைகள் மற்றும் 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
Jallikkattu competition
இதில் காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும் பிடிபடாத காளைகளுக்கும் சில்வர் அண்டா, சேர், குடம் ,பட்டு புடவை, மின்விசிறி, பணமுடிப்பு உள்ளிட்ட பல்வேறு பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் அசம்பாவிதம் ஏதாவது நிகழாமல் இருக்க காவல்துறையினர் 200 க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இப்போட்டியை சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கண்டு களித்து வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu