கடலை சாகுபடியில் கலக்கும் ஐடி இளைஞர்

அரியலூர் மாவட்டத்தில் கடலை சாகுபடியில் கலக்கும் ஐடியில் வேலை பார்க்கும் இளைஞர் இந்த ஆண்டு ஏழு சதவீதம் கூடுதல் மகசூல் கிடைப்பதாக தெரிவித்தார்.

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே உள்ள இடையாறு கிராமத்தைச் சேர்ந்தவர் கொளஞ்சி. இவர் எம்சிஏ படித்து விட்டு சென்னையில் உள்ள ஐடி நிறுவனத்தில் மாதம் 97 ஆயிரம் ரூபாய் சம்பளத்திற்கு வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அவரது தந்தை ராமசாமி கடந்த 2007 ம் ஆண்டு காலமானார். தந்தை உயிருடன் இருந்தவரை 2 ஏக்கர் நிலத்தில் சாகுபடி செய்து வந்துள்ளார். அந்த நிலங்கள் ஆள் யாரும் இல்லாததால் சாகுபடி செய்யாமல் தரிசு நிலங்களாக கிடந்துள்ளது.

2013 ஆம் ஆண்டு விவசாயம் செய்யலாம் என்று நினைத்து முதல்முறையாக கடலை சாகுபடி செய்துள்ளார். முதலாமாண்டு கடலை சாகுபடி செய்யும் பொழுது அதில் எந்தவித முன்னேற்றமும் இன்றி பெரிய இழப்பு ஏற்பட்டது. இதை எவ்வாறு சரி செய்ய வேண்டும் என பல்வேறு வியூகங்களை வகுத்து அடுத்த ஆண்டு சரியான பருவத்தில் கடலை விதைப்பு செய்து அதற்கான பூச்சி மருந்து தெளித்தல், வெட்டுதல் உள்ளிட்ட பணிகளை சிறப்பாக செய்தார். அந்த ஆண்டு அவருக்கு கடலையில் சரியான மகசூல் கிடைத்தது.

கடந்த 3 ஆண்டுகளாக கடலையில் தான் அதிகப்படியான மகசூல் எடுப்பதாக தெரிவிக்கிறார். இதுகுறித்து அதிகாரிகளிடம் கூறிய பொழுது சாதாரணமாக விவசாயிகள் விவசாயம் செய்யும் கடலை ஏக்கருக்கு 900 கிலோ சரக்காக மட்டுமே இருக்கும். ஆனால் கொளஞ்சி செய்யும் சாகுபடியில் ஒவ்வொரு ஆண்டும் மகசூல் குறையாமல் ஏக்கருக்கு 1600 கிலோ வரை உள்ளது என்றும் கூறுகின்றனர்.நான் சென்னையில் உள்ள ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறேன். என்னுடன் வேலை பார்த்த ஒவ்வொருவரும் நான் ஆட்டுப்பண்ணை வைக்க போகிறேன். மாட்டுப் பண்ணை வைக்க போகிறேன் .விவசாயம் செய்யப் போகிறேன் என்று கூறுவார்கள்.

நான் இதை உதாரணமாக எடுத்துக்கொண்டு எனக்கு விடுமுறை கிடைக்கும் நேரங்களில் வாரத்திற்கு ஒரு முறை எனது சொந்த ஊருக்கு வந்து விவசாய நிலங்களில் விவசாயம் செய்யும் பயிர்களை பார்த்து செல்வேன். மற்ற நாள்களில் எனது மனைவி பார்த்துக்கொள்வார்கள் தற்போது கொரோனா ஊரடங்கு காலம் ஏற்பட்டதால் வீட்டில் இருந்தே வேலை பார்க்க கூறியது எனக்கு ஏதுவாக இருந்தது. அதை பயன்படுத்தி மேலும் விவசாயத்தில் அதிக ஆர்வம் காட்டி விவசாயத்தை செய்து வந்தேன்‌. கடந்த 2 ஆண்டுகளாக எனக்கு இதில் கூடுதல் மகசூல் கிடைத்தது.தற்பொழுது இந்த ஆண்டு அதைவிட ஐந்திலிருந்து ஏழு சதவீதம் கூடுதல் மகசூல் கிடைப்பதாகவும் தெரிவித்தார்.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி