கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயத்தில் வரலாற்று நூல் விற்பனை நிலையம் திறப்பு

கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயத்தில் வரலாற்று நூல் விற்பனை நிலையம் திறப்பு
X

இந்திய தொல் பொருள் ஆய்வு துறை, திருச்சி சரக இயக்குனர் அருண்ராஜ் , இந்திய தொல்லியல் துறை உதவி கண்காணிப்பு பொறியாளர் கலைச்செல்வன்,கங்கை கொண்ட சோழபுரம் மேம்பாட்டுக் குழுத் தலைவர் பொறியாளர் கோமகன் ஆகியோர் திறந்து வைத்தனர்

கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயத்தின் வெளிப்புறத்தில் 2 கோடியே 1 லட்சம் மதிப்பீட்டில் நூல் விற்பனை நிலையம் திறக்கப்பட்டது

கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயத்தின் வெளிப்புறத்தில் 2 கோடியே 1 லட்சம் மதிப்பீட்டில் நூல் விற்பனை நிலையம் சிற்றுண்டி விளையும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் கழிப்பிட வசதி திறக்கப்பட்டது.

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள உலகப் பிரசித்தி பெற்ற கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயத்தில் 2 கோடியே 1 லட்சம் மதிப்பீட்டில் கங்கை கொண்ட சோழபுரம் பற்றிய வரலாற்று நூல் விற்பனை நிலையங்கள் சிற்றுண்டி நிலையம் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான நவீன கழிப்பிட கட்டிடங்கள், புல் தோட்டம், கருங்கள் நடைபாதை, அமைக்கும் பணி முடிவுற்று திறக்கப்பட்டது. மேலும் பார்க்கிங் வசதி அமைக்கும் பணி நடைபெற உள்ளது.

இந்திய தொல் பொருள் ஆய்வு துறை, திருச்சி சரக இயக்குனர் அருண்ராஜ் , இந்திய தொல்லியல் துறை உதவி கண்காணிப்பு பொறியாளர் கலைச்செல்வன்,கங்கை கொண்ட சோழபுரம் மேம்பாட்டுக் குழுத் தலைவர் பொறியாளர் கோமகன் ஆகியோர் திறந்து வைத்தனர். இதில் முதுகலை தோட்டக்கலை உதவியாளர் சுந்தர மூர்த்தி, உதவி தொல்லியளாலர் முத்துகுமார், கிராம நிர்வாக அலுவலர் காமராஜ் மற்றும் கோவில் பராமரிப்பு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
சிறுநீரகத்துல நச்சுக்கள் இருக்கா ?..உடனே வெளியேற்ற இந்த சில பழங்கள சாப்டுங்க..!| Best fruits for kidney cleansing naturally in tamil