மாமன்னன் ராஜேந்திரசோழர் நினைவாக கங்கை கொண்டசோழபுரத்தில் தோரணவாயில்

மாமன்னன் ராஜேந்திரசோழர் நினைவாக கங்கை கொண்டசோழபுரத்தில் தோரணவாயில்
X

ராஜேந்திரசோழரின் வாழ்க்கை வரலாறு குறித்த குருந்தகட்டை போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டார்.

Gangaikonda Cholapuram Temple - மாமன்னன் ராஜேந்திரசோழர் நினைவாக கங்கை கொண்டசோழபுரத்தில் தோரணவாயில் அமைக்கப்பட்டும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

Gangaikonda Cholapuram Temple -அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் சோழமாமன்னர் ராஜேந்திரசோழன் பிறந்த ஆடிதிருவாதிரை நாளை அரசு விழாவாக கொண்டாட்டமாக தொடங்கிவைத்த போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர், மாவட்ட நிர்வாகம் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள ராஜேந்திரசோழன் வாழ்க்கை வரலாற்று குரும்படத்தை வெளியிட்டார்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கங்கைகொண்ட சோழபுரம் என்ற நகரை தோற்றுவித்து சோழரசாம்ராஜ்யத்தை கடல்கடந்தும் கொண்டு சென்ற, மாபெரும் கடற்படையை முதன்முதலாக நிறுவிய சோழமாமன்னர் ராஜேந்திரசோழன் பிறந்த நாளான ஆடி திருவாதிரையை அரசுவிழாவாக கொண்டாட தமிழகஅரசு சென்றஆண்டு ஆணை பிறப்பித்திருந்தது.

இதனை தொடர்ந்து ராஜேந்திரசோழரின் பிறந்தநாளான ஆடிதிருவாதிரையை முன்னிட்டு கங்கைகொண்ட சோழபுரத்தில் அரசுவிழா கொண்டாடப்படுகிறது. காலையில் கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.

இதனைத்தொடர்ந்து காலை 8.30மணிக்கு மேளக்கச்சேரியுடன் தொடங்கிய அரசுவிழாவில் பங்கேற்க வந்த போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கருக்கு மயிலாட்டம் உள்ளிட்ட கிராமிய கலைநிகழ்ச்சிகளுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதனையடுத்து நடைபெற்ற விழாவிற்கு மாவட்ட வருவாய் அலுவலர் கலைவாணி வரவேற்றார். மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி தலைமைதாங்கினார். எம்எல்ஏக்கள் கண்ணன், சின்னப்பா முன்னிலை வகித்தனர். போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் சிறப்புரையாற்றினார்.

பின்னர் மாவட்ட நிர்வாகம் சார்பில் தயாரிக்கப்பட்ட ராஜேந்திரசோழரின் வாழ்க்கை வரலாறு குறித்த குருந்தகட்டை போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் வெளியிட மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதி பெற்றுக்கொண்டார். பின்னர் இரவு 10மணிவரை கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா தலைமையில் 200க்கும் மேற்ப்பட்டோர் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் மீன்சுருட்டி மருத்துவ குழுவினர் சிறப்பு மருத்துவ முகாமை நடத்திவருகின்றனர்.

மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் கைவினைப் பொருட்கள் மற்றும் சிறுதானிய உணவுகள் கண்காட்சிகள் வைக்கப்பட்டுள்ளன. மேலும் வனத்துறை சார்பில் மரக்கன்றுகள் கண்காட்சிகளும் வைக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் சிரமம் இன்றி வந்து செல்வதற்காக போக்குவரத்து துறை சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. விழாவினை காண சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பொதுமக்கள் ஆர்வமுடன் வந்த வண்ணம் உள்ளனர். வெளிநாடுகளில் இருந்தும் வருகைதரும் சுற்றிலா பயணிகள் விழாவில் பங்கேற்று வருகின்றனர்.

இதனையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர், மாமன்னன் ராஜேந்திரசோழர் நினைவாக கங்கை கொண்டசோழபுரத்தில் தோரணவாயில் அமைக்கப்பட்டும் என்று கூறினார்.

மேலும் ராஜேந்திர சோழனுக்கு சிலை வைக்கப்படுமா என்ற கேள்விக்கு பதில்அளித்த அமைச்சர் சிவசங்கர், மாமன்னனின் அதிகார பூர்வ படம் இல்லை. கோவிலில் வளாகத்தில் அதற்கான உருவம் உள்ளது அதனை முதல்வர் கவனத்திற்க்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் எனக்கூறினார். அடுத்த ஆண்டு பிறந்த நாள் விழா கூடுதல் தினமாக கொண்டாடப்படும் என்றும், ஜெயங்கொண்டத்தில் உள்ள அரசு கலைக்கல்லூரிக்கு ராஜேந்திரசோழரின் பெயர் வைக்க நடவடிக்கை எடுக்கப்டும் என்று அமைச்சர் சிவசங்கர் கூறினார்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!