ஜெயங்கொண்டம் நகராட்சியில் ரூ. 281 லட்சம் மதிப்பீட்டில் மேம்பாட்டு பணி
ஜெயங்கொண்டம் நகராட்சியில் ரூ.281 லட்சம் மதிப்பீட்டில் மேம்பாட்டு பணிகளை கண்ணன் எம்.எல்.ஏ. துவக்கி வைத்தார்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சியில், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் மூலம்,ஜெயங்கொண்டம் 8-வது வார்டு பிச்சனேரியினை ரூ.100 லட்சம் மதிப்பீட்டில் மேம்பாடு செய்யும் பணி, ஜெயங்கொண்டம் 9-வது வார்டு பதுவனேரியில் ரூ. 181 லட்சம் மதிப்பீட்டில் மேம்பாடு செய்யும் பணியினை, ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் துவக்கி வைத்தார்.
இந்நிகழ்வில் நகர்மன்ற தலைவர் சுமதி சிவகுமார், நகர்மன்ற துணை தலைவர் கருணாநிதி , 9-வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் காஞ்சனா சரவணன், நகராட்சி பணி மேற்பார்வையாளர் ராமகிருஷ்ணன் மற்றும் கிளைக் கழக செயலாளர்கள் மருதை விஜயன், குமரவேல் மற்றும் நகர கழக நிர்வாகிகள், கழக முன்னோடிகள் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu