இல்லம் தேடி கல்வி குறித்து தப்பாட்ட குழுவினர் விழிப்புணர்வு நிகழ்ச்சி

தா. பழூர் கடைவீதியில் இல்லம் தேடி கல்வி திட்டத்தின் கீழ் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
அரியலூர் மாவட்டம் தா. பழூர் கடைவீதியில் இல்லம் தேடி கல்வி திட்டத்தின் கீழ் விழிப்புணர்வு நிகழ்ச்சி வட்டார வளர்ச்சி அலுவலர் குணசேகரன் தலைமையில் நடைபெற்றது.
இதில் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவது மற்றும் குழந்தைகள் ஆர்வத்துடன் படிக்க வேண்டும், கஷ்டப்பட்டு படிக்காமல் இஷ்டப்பட்டு படிக்க வேண்டும் போன்ற விழிப்புணர்வு வரிகள் அடங்கிய பாடல்களைப் பாடி தப்பாட்டம் ஆடி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
வட்டார கல்வி அலுவலர் கலியபெருமாள் உட்பட அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர், துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu