மதனத்தூர் கருப்புசாமி கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு

மதனத்தூர் கருப்புசாமி கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
X

உண்டியல் திருடு போன மதனத்தூர் கோவில்.

மதனத்தூர் கருப்புசாமி கோவில்ண்டியலில் இருந்த 10ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்துகொண்டு உண்டியலை தூக்கி எறிந்து உள்ளனர்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள மதனத்தூர் கிராமத்தில், கருப்புசாமி கோவில் அமைந்துள்ளது. இதில் உள்ள உண்டியலை அடையாளம் தெரியாத மர்ம நபர் திருடிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவிலில் இருந்த மின் விளக்குகளை அணைத்து விட்டு, கோவில் கேட்டில் இரும்பு கம்பியில் இரும்பு செயின் மூலம் கட்டி வைக்கப்பட்டு இருந்த உண்டியலை எடுத்து சென்று மர்ம நபர்கள், கொள்ளிடக்கரை அருகே உள்ள மதகில் உண்டியலில் இருந்த சுமார் 10 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்து கொண்டு உண்டியலை தூக்கி எறிந்து உள்ளனர். அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கண்டு எடுத்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த தா.பழூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நேற்று காரைக்குறிச்சி கிராமத்தில் இரண்டு வீடுகளில் திருட்டு நடைபெற்ற நிலையில், கோவில் உண்டியல் திருட்டு நடைபெற்று உள்ளது.தொடர் திருட்டு சம்பவங்களால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!