மருந்து கடை உரிமையாளர் வீட்டில் பூட்டை உடைத்து ரூ.10 ஆயிரம் கொள்ளை

மருந்து கடை உரிமையாளர் வீட்டில் பூட்டை உடைத்து ரூ.10 ஆயிரம் கொள்ளை
X

கொள்ளை நடந்த மருந்து கடை உரிமையாளர் வீடு.

தா.பழூர் அருகே மருந்து கடை உரிமையாளர் வீட்டில் ரூ.10 ஆயிரம் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள மேலணிக்குழி கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்த் விஜய். இவர் தா.பழூரை அடுத்த கோட்டியால் கிராமத்தில் ஆங்கில மருந்து கடை நடத்தி வருகிறார். தற்போது மேலே மைக்கேல் பட்டி செல்லும் சாலை அருகே வாடகை வீட்டில் இவர் வசிக்கிறார்.

இந்நிலையில் நேற்று வழக்கம்போல் மெடிக்கல் கடைக்கு சென்று பின்னர் இரவு கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் பீரோவில் வைத்திருந்த ரூபாய் பத்தாயிரம் ரொக்கப் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று விட்டனர்.


மேலும் வீட்டின் ஜன்னல்களை சேதப்படுத்தி அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். பின்னர் இதுகுறித்து அப்பகுதி போலீசாருக்கு அவர் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தா.பழூர் போலீசார் இதுபற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோன்று கடந்த சில வருடங்களுக்கு முன்பு இந்த வீட்டில் திருட்டு சம்பவம் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!