/* */

இல்லம் தேடி கல்வி திட்டம் குறித்து தலைமையாசிரியர்களுக்கு பயிற்சி

இல்லம் தேடி கல்வி திட்டம் குறித்த தலைமை ஆசிரியர்களுக்கான பயிற்சி கூட்டம் தா.பழூர் ஒன்றியத்தில் நடந்தது.

HIGHLIGHTS

இல்லம் தேடி கல்வி திட்டம் குறித்து தலைமையாசிரியர்களுக்கு பயிற்சி
X

இல்லம் தேடி கல்வி திட்டம் தொடர்பாக அரியலூர் மாவட்டத்தில் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தமிழக முதல்வர் அறிவித்த இல்லம் தேடி கல்வி திட்டம் குறித்து தலைமையாசிரியர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வட்டார கல்வி அலுவலர்கள் கலியபெருமாள், ராசாத்தி ஆகியோர் கலந்துகொண்டு தலைமை ஆசிரியர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

பயிற்சியின்போது, இல்லம் தேடி கல்வி திட்டத்துக்கு தன்னார்வலர்களை தேர்வு செய்வது, பள்ளி தகவல் தொழில்நுட்ப மேலாண்மை, மாணவர்களுக்கான மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், கரோனா தடுப்பு விழிப்புணர்வு, சுகாதார விழிப்புணர்வு, குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் தடுத்தல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனைக் கூட்டத்தில் தலைமை ஆசிரியர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.

கூட்டத்திற்கான ஏற்பாடுகளை வட்டார வள மைய மேற்பார்வையாளர் இளவழகன் செய்திருந்தார். ஆசிரியர் பயிற்றுனர்கள் சிவா, ஜெய்சங்கர், டேவிட் ஆரோக்கியதாஸ், சுதா, சம்பத் ஆகியோர் பயிற்சி அளித்தனர். தலைமை ஆசிரியர்களுக்கு கோடை காலத்தில் பள்ளிகளை செயல்படுத்துவது குறித்த பல்வேறு சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தனர். கூட்டத்தில் தா.பழூர் ஒன்றியத்தைச் சேர்ந்த 85 தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 16 Nov 2021 7:25 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பொங்கல் பொன்னாளில் வாழ்த்து சொல்வோமா..?
  2. வீடியோ
    என்னோட இரண்டாவது படம் ஆதி கூட கொஞ்சும் தமிழில் பேசிய Heroine...
  3. திருத்தணி
    திருத்தணி முருகன் கோவில் உண்டியல் திறப்பு:கிடைத்த காணிக்கை ரூ.1 கோடி
  4. ஆன்மீகம்
    சரஸ்வதி பூஜை: அறிவின் தெய்வத்தை வணங்கும் புனித நாள்
  5. வீடியோ
    பெத்தப் பிள்ளைய பாதுகாக்க வக்கில்ல ! #veeralakshmi #savukkushankar...
  6. கோவை மாநகர்
    கோவை அருகே நச்சுப் புகையை வெளியேற்றிய தார் தொழிற்சாலை செயல்பட தடை
  7. லைஃப்ஸ்டைல்
    மணமக்களுக்கு அன்பு நிறைந்த இல்லற வாழ்க்கைக்கான வாழ்த்துகள்
  8. கோவை மாநகர்
    கோவை சிறையில், சவுக்கு சங்கரை பேட்டி எடுத்த யூடியூபர் பெலிக்ஸ்...
  9. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை வானில் பறக்க காத்திருக்கும் ஜோடிகளுக்கு வாழ்த்துகள்..!
  10. வீடியோ
    நாங்கள் காத்துகொண்டு இருக்கிறோம் ! #annamalai #annamalaibjp ...