இறப்பிலும் இணைபிரியாத இந்து முஸ்லீம் நண்பர்கள்

இறப்பிலும் இணைபிரியாத இந்து முஸ்லீம் நண்பர்கள்
X

இணை பிரியாத நண்பர்களுக்கு அஞ்சலி செலுத்திய போஸ்டர் 

ஜெயங்கொண்டம் நகரில் இணைபிரியாத இந்து முஸ்லீம் நண்பர்கள், இறப்பிலும் ஒருவர்பின் ஒருவராக இறந்தது பெரும்சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகரில் இணைபிரியாத இந்து முஸ்லீம் நண்பர்கள் இறப்பிலும் ஒருவர் பின் ஒருவராக அரை மணி நேரத்திற்குள்ளாக இறந்தது பெரும் சோகத்தை ஆழ்த்தியுள்ளது.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஜூபிலி ரோட்டில், மசூதி அருகே வசித்து வருபவர் மகாலிங்கம் (78). இவர் தெருவின் அருகே உள்ள காளியம்மன் கோவிலில் பூசாரியாக உள்ளார். சிறிய டீக்கடை ஒன்றை நடத்தி வந்தார். இவர் வீட்டின் எதிர் புறம் வசித்து வருபவர் ஜெயிலாபுதின் (66). இவர் தெருவில் ஒரு ரைஸ்மில் நடத்தி வருகிறார். இவர்கள் இருவரும் சுமார் 40 வருடங்களுக்கு மேலாக இணைபிரியா நண்பர்களாக இருந்து வந்தனர். மகாலிங்கம் வீட்டில் சுப காரியங்கள் நடந்தாலும், பண்டிகை காலங்களாக இருந்தாலும் ஜெயிலாபுதீன் கலந்து கொள்வார். அதுபோல் ஜெயிலாபுதீன் வீட்டில் சுபகாரியங்கள் பண்டிகை காலங்களிலும் கலந்து கொண்டு உணவு பதார்த்தங்களை பரிமாறிக் கொள்வார்கள்.

இருவருமே நேற்று முன்தினம் உடல்நலக்குறைவால் ஜெயங்கொண்டம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றனர். அருகருகே இருந்த படுக்கையில் சிகிச்சை பெற்றனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஒருவர் பின் ஒருவராக அரை மணி நேரத்திற்குள்ளாக இறந்தனர். இதுகுறித்து இருவரின் குடும்பத்தினர்கள் கூறும்போது எங்களின் தாத்தா முதல் தலை முறை தந்தை இரண்டாம் தலை முறை இதை தொடர்ந்து நாங்களும் மூன்றாவது தலைமுறையாக இதேபோல், ஒற்றுமையாக உற்றார், உறவினர் போல் சுப துக்க காரியங்களில் ஒன்றிணைந்து மதங்களை கடந்து நாங்கள் நட்புடன் தொடர்கிறோம். இனிமேலும் எங்கள் இரண்டு குடும்பங்களின் உறவு பந்தம் தொடரும். அதுதான் எங்களின் தாத்தா, தந்தை ஆகியோரின் ஆசையும் என்று கூறினர்.

நட்பாக பழகி ஒரே நேரத்தில் இருவரும் இறந்த இந்த சம்பவம் அரியலூர் மாவட்டம் முழுவதும் ஆச்சர்ய விஷயமாக பேசப்பட்டு வருகிறது.

Tags

Next Story
ai marketing future