கொட்டும் மழையில், வெட்ட வெளியில் பிணம் எரிப்பு: வேதனையில் கிராம மக்கள்

கொட்டும் மழையில், வெட்ட வெளியில் பிணம் எரிப்பு: வேதனையில் கிராம மக்கள்
X

திறந்த நிலையில் உள்ள மயானம்.

Cremation Ceremony - அரியலூர் மாவட்டம் கீழக்குடிகாடு கிராமத்தில் மயான கொட்டகை இல்லாததால் கொட்டும் மழையில் சடலத்தை எரியூட்டப்படும் அவலநிலை.

Cremation Ceremony -அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கீழக்குடிகாடு கிராமத்தில் வசித்து வரும் செல்வம், செல்வி. இந்த தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். செல்வத்தின் மகன் சக்திவேல்(17) பிறந்ததிலிருந்து ஊனமுற்றவராக இருந்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில வருடங்களாக உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் திடீரென உயிரிழந்தார்.

இதனையடுத்து நேற்று மாலை அவரது உடல் எரியூட்டப்படும் நிலையில் மயான கொட்டகை இல்லாததால் திடீரென பெய்து வரும் மழையால் நனைந்தபடி உடல் எரிந்து வரும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. கிராம மக்கள் மயான கொட்டகை, சாலை வசதி, மின்சார வசதி ஏற்படுத்திக் தரவேண்டி மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
நைட்ல இதெல்லாம் சாப்பிட கூடாதா...? அச்சச்சோ !.. இது தெரியாம இருந்துடீங்களே !