ஜெயங்கொண்டத்தில் கொட்டித் தீர்த்த கனமழை: கடலை விவசாயிகள் மகிழ்ச்சி

ஜெயங்கொண்டத்தில் கொட்டித் தீர்த்த கனமழை: கடலை விவசாயிகள் மகிழ்ச்சி
X
ஜெயங்கொண்டத்தில் நேற்று 13மி.மீ மழை பெய்தது. கடலை பயிருக்கு இம்மழை நல்ல ஊட்டத்தை வழங்கும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து, அனல் காற்று வீசி அனைவரையும் வாட்டி வதைத்து வருகிறது. இதையடுத்து தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு ஒரு சில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.

இந்நிலையில் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில், நேற்று காலை முதலே வெயிலின் தாக்கம் அதிகரித்து, மாலையில் வெயிலின் தாக்கம் லேசாக குறைந்தது. இந்நிலையில் இரவு 7 மணி முதல் மேகம் இருண்டு காணப்பட்டது. 8 மணிக்கு மேல் திடீரென காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. ஆரம்பத்தில் மிதமாக பெய்த மழையானது, பின்னர் அதன் தாக்கம் அதிகரித்து காற்றுடன் கூடிய கனமழையாக மாறி சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக கொட்டி தீர்த்தது. ஜெயங்கொண்டத்தில் நேற்று 13மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

கடலை பயிருக்கு இம்மழை நல்ல ஊட்டத்தை வழங்கும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags

Next Story
ai marketing future