சுகாதார செவிலியர்சங்கம் செவிலியர் கூட்டமைப்பு மாநில பொதுக்குழு கூட்டம்

சுகாதார செவிலியர்சங்கம் செவிலியர் கூட்டமைப்பு மாநில பொதுக்குழு கூட்டம்
X

ஜெயங்கொண்டத்தில் தனியார் திருமண மண்டபத்தில் சுகாதார செவிலியர் சங்கம் மற்றும் செவிலியர் கூட்டமைப்பு சார்பாக மாநில பொதுக் குழு கூட்ட மாநாடு நடைபெற்றது. 

அவசர கால பணிகள் தவிர மற்ற நேரங்களில் 8 மணி நேரம் மட்டுமே பணி செய்ய உத்தரவிட வேண்டும் செவிலியர் சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அரியலூர் - அவசர கால பணிகள் தவிர மற்ற நேரங்களில் 8 மணி நேரம் மட்டுமே பணி செய்ய உத்தரவிட வேண்டும் என சுகாதார செவிலியர் சங்கம் மற்றும் செவிலியர் கூட்டமைப்பு சார்பாக மாநில பொதுக் குழு கூட்டம் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் தனியார் திருமண மண்டபத்தில் சுகாதார செவிலியர் சங்கம் மற்றும் செவிலியர் கூட்டமைப்பு சார்பாக மாநில பொதுக் குழு கூட்ட மாநாடு நடைபெற்றது. மாநாட்டு கூட்டத்திற்கு மாநில தலைவர் மீனாட்சி தலைமை தாங்கினார். கூட்டத்தில் கிராமப் பகுதி சமுதாய சுகாதார செவிலியர் காலி பணியிடங்கள் உடனடியாக நிரப்ப வேண்டும். பணி விதியினை திருத்தம் செய்ய வேண்டும். கோவிட் 19 தடுப்பூசி பணி ஞாயிற்றுக்கிழமை நடத்துவதை மாற்றி வேலை நாட்களில் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அவசர கால பணிகள் தவிர மற்ற நேரங்களில் 8 மணி நேரம் மட்டுமே பணி என்பதை உறுதி செய்ய வேண்டும். ஏழாவது ஊதிய குழுவின் 21 மாத நிலுவை தொகையினை உடனே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தீர்மானமாக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றினர்.

கூட்டத்தில் சுகாதார செவிலியர் சங்கம் மற்றும் செவிலியர் கூட்டமைப்பை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!