ஜெயங்கொண்டத்தில் கைத்தறி நெசவு தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

ஜெயங்கொண்டத்தில் கைத்தறி நெசவு தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
X

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கைத்தறி நெசவு தொழிலாளர்கள்.

ஜெயங்கொண்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கைத்தறி நெசவு தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கைத்தறி நெசவு தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கைத்தறி பட்டு, நூல் ஆகியவற்றுக்கு போடப்பட்டுள்ள ஜி.எஸ்.டி. வரி உட்பட அனைத்து வரிகளையும் தள்ளுபடி செய்ய வேண்டும், அரசு அறிவித்துள்ள 10 சதவீத கூலி உயர்வை உடனே அமல்படுத்த வேண்டும், நலவாரிய உறுப்பினர்களுக்கு உதவி தொகை இரண்டு மடங்காக உயர்த்தி கொடுக்க வேண்டும், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூ.7,500 நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டன.

ஆர்ப்பாட்டத்துக்கு கைத்தறி நெசவு தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் எஸ்.என்.துரைராஜ் தலைமை வகிகத்தார். கந்தர்வகோட்டை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ.வும், மாநிலக்குழு உறுப்பினருமான சின்னதுரை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் இளங்கோவன், விவசாய சங்க மாவட்ட செயலாளர் மகாராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் மணிவேல் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.


Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!