தா.பழூர் அருகே தொடர்மழையால் நீரில் மூழ்கிய தரைப்பாலம்: பாெதுமக்கள் அவதி

தா.பழூர் அருகே தொடர்மழையால் நீரில் மூழ்கிய தரைப்பாலம்: பாெதுமக்கள் அவதி
X

தா.பழூர் அருகே தொடர்மழையால் நீரில் மூழ்கிய தரைப்பாலம்.

தரைப்பாலத்தில் அதிக அளவில் தண்ணீர் செல்வதால் சாலையை கடந்து செல்லும் பொதுமக்கள், விவசாயிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.

அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட காசாங்கோட்டை நடுவலூர் கிராமங்களுக்கு இடையே சுத்தமல்லி பெரிய ஓடை தரைப்பாலம் அமைந்துள்ளது. இது அரியலூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் உள்ள வடிகால் மழைநீரை சுத்தமல்லி நீர் தேக்கத்திற்கு செல்லும் வழியில் உள்ள தரைப்பாலமாகும். தற்போது பெய்து வரும் தொடர் மழையால் தரைப்பாலம் நீரில் மூழ்கியது. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தரைப்பாலத்தில் அதிக அளவில் தண்ணீர் செல்வதால் சாலையை கடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். இதனால் இந்த சாலையின் வழியே 2 கிலோமீட்டர் தூரம் செல்லக்கூடிய கிராமத்திற்கு, தற்போது சுத்தமல்லி வழியாக 6 கிலோமீட்டர் தூரம் சுற்றி செல்லக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.

ஆகையால் ஒவ்வொரு ஆண்டும் மழை காலங்களில் தரைப்பாலத்தில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதேநிலை தாெடர்ந்து ஏற்படுவதால், தரைப்பாலத்தினை மாற்றி மேம்பாலமாக கட்டித்தர வேண்டும் என அப்பகுதி மக்கள் தமிழக அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
ஊராட்சிகளை நகராட்சியுடன் இணைக்கும் முடிவை கைவிட கோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்