ஜெயங்கொண்டம் அருகே காணாமல் போன மூதாட்டி உடல் ஓடையில் கண்டெடுப்பு

ஜெயங்கொண்டம் அருகே காணாமல் போன மூதாட்டி   உடல் ஓடையில் கண்டெடுப்பு
X

மூதாட்டி காமாட்சி.

ஜெயங்கொண்டம் அருகே காணாமல்போன மூதாட்டி உடல் ஓடையில் புதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள அமிர்தராயங்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் காமாட்சி. சுமார் 85 வயது மதிக்கத்தக்கவர். இவருக்கு 3 மகள் மற்றும் 2 மகன் உள்ளனர். இதில் 3 மகள்களுக்கும் திருமணம் ஆன நிலையில் ஒரு மகன் இறந்து விட்டார். இதில் கடைசி மகனான செல்வம் என்பவர் அடிக்கடி சொத்து பிரச்சினை காரணமாக தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தனியாக வாழ்ந்து வந்தவர் கடந்த 15 நாட்களுக்கு முன் வீட்டை விட்டு போனவர் வீடு திரும்பி வரவில்லை.

இதனால் காணமல் போன காமாட்சியை உறவினர்கள் தேடும் பணியில் ஈடுபட்டிருந்தனர். வீட்டில் இருந்து சுமார் 1 கிலோமீட்டர் தூரம் உள்ள தனது கொல்லை அருகே உள்ள அணைக்குடம் கிராமத்தில் இருந்து வரும் பாட்டாகோவில் ஓடை உள்ளது. இதில் நாய் மண்ணை தோண்டி இருந்த இடத்தை சென்று பார்த்தனர். அங்கு இறந்து துர்நாற்றம் வீசும் நிலையில் காமாட்சி மண்ணில் புதைந்து கிடந்தார்.


இதுபற்றி தா.பழூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!