ஸ்ரீபுரந்தான் கிராமத்தில் சாலை விபத்தில் பட்டதாரி இளைஞர் உயிரிழப்பு

ஸ்ரீபுரந்தான் கிராமத்தில் சாலை விபத்தில் பட்டதாரி இளைஞர் உயிரிழப்பு
X

பைல் படம்.

அரியலூர்- ஸ்ரீபுரந்தான் கிராமத்தில் சாலை விபத்தில் சம்பவ இடத்திலேயே பட்டதாரி இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக போலீசார் விசாரணை.

அரியலூர் மாவட்டம் ஸ்ரீபுரந்தான் கிராமத்தை சேர்ந்தவர் பிரவீன். இவர் அரியலூர் அருகே உள்ள நெல்லியான்டவர் கல்லூரியில் மெக்கானிக் இன்ஜினியரிங் படித்து வருகிறார். இந்நிலையில் இன்று கல்லூரி செல்வதற்கு தனது ஸ்கூட்டி மூலம் ஸ்ரீபுரந்தான் வழியாக சென்றுள்ளார். அப்பொழுது ஸ்ரீபுரந்தான் பேருந்து நிறுத்தம் அருகே இரண்டு சக்கர வாகனமும் டிராக்டரும் நேருக்கு நேர் மோதியதில் இரண்டு சக்கர வாகனத்தில் சென்ற பிரவீன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் அறிந்த விக்கிரமங்கலம் போலீசார் உயிரிழந்த பிரவீன் உடலை கைப்பற்றி ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!