ஆளுநர் அரசியல் சட்டவரம்பைமீறி தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்: பழ.நெடுமாறன்

ஆளுநர் அரசியல் சட்டவரம்பைமீறி தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்: பழ.நெடுமாறன்
X
கல்வித்துறையில் ஆளுநர் தன்னிச்சையாகஅதிகாரம் செலுத்த தொடங்குவார் இதற்கு ஆரம்பத்திலேயே முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்: பழ.நெடுமாறன்

அரியலூர்- ஜெயங்கொண்டம் அருகே கங்கை கொண்ட சோழபுரம் மாமன்னன் ராஜேந்திர சோழன் அரங்கம் மீரா மஹாலில் தமிழர் நீதிக் கட்சியின் தலைவர் சுபா.இளவரசன் தலைமையில் நடைபெற்ற தமிழக மக்கள் பண்பாட்டுக் கலை விழாவில் கலந்து கொள்ள வந்த தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறியதாவது :

ஆளுநர் அரசியல் சட்ட வரம்பை மீறி தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்கள் துறை பேராசிரியர்களை அழைத்து உதகமண்டலத்தில் தன்னிச்சையாக ஒரு மாநாடு நடத்துகிறார். தமிழக அரசுக்கும் இந்த மாநாட்டிற்க்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என தெரிய வருகிறது. இந்த மாநாட்டில் எந்த பல்கலைக்கழகங்களில் இருந்தும் துணைவேந்தர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொள்ளக் கூடாது என அவர்களுக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் அறிவுறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இதை இப்போது அனுமதித்தால் இதன் பின் விளைவுகள் மோசமாக இருக்கும். இது தொடர்ந்தால் தமிழகத்தில் கல்வித் துறையில் ஆளுநர் தன்னிச்சையாக அதிகாரம் செலுத்த தொடங்குவார். இதற்கு ஆரம்பத்திலேயே முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என தமிழக முதலமைச்சரை வேண்டிக்கொள்கிறேன் என பழ.நெடுமாறன் தெரிவித்தார்.

Tags

Next Story
ai in future agriculture