சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வியாபாரி போக்சோ சட்டத்தில் கைது

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வியாபாரி போக்சோ சட்டத்தில் கைது
X

கைது செய்யப்பட்ட அன்புச்செல்வன்.

ஆண்டிமடம் அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வியாபாரி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள கொளப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவர் பழம் காய்கறி கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இவரது மகன் அன்புச்செல்வன் (20) இவர் தனது தந்தைக்கு உதவியாக கடையை பார்த்து வருகிறார். அப்போது அங்கு வந்த ஆண்டிமடம் விளந்தை பகுதியைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு பயிலும் 14 வயது சிறுமியை காதலித்து ஆசைவார்த்தை கூறி கடைக்குள் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் சிறுமிக்கு வலி ஏற்பட்டுள்ளது. இது குறித்து பெற்றோர்களுக்கு தெரியவந்ததையடுத்து சிறுமியை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்ல முற்பட்டனர். அப்போது சிறுமி நடந்த அனைத்தையும் பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார்.

இச்சம்பவம் குறித்து அன்புச்செல்வனிடம் கேட்டபோது அவருக்கு ஆதரவாக பெற்றோர்கள் மற்றும் 17 வயது சிறுவன் ஒருவன் உடந்தையாக இருந்ததுடன், சிறுமியின் பெற்றோர்களுக்கு அந்த சிறுவன் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய, போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி உரிய விசாரணை செய்து அன்புச்செல்வன் மற்றும் 17 வயது சிறுவன் உள்பட 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர்.மேலும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக அன்புச்செல்வனை போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரித்து வருகின்றனர். சிறுமி மற்றும் சிறுமி குடும்பத்தினரை திட்டி கொலை மிரட்டல் விடுத்த 17 வயது சிறுவனையும் போலீ சார் கைது விசாரணை செய்து வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!