சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவர்  மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
X

குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட சிவகுமார்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.

ஜெயங்கொண்டத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவர் தனது பக்கத்து வீட்டு சிறுமியை ஆசைவார்த்தை கூறி பல முறை பாலியல் வன் தாக்குதல் செய்துள்ளார். இதை வெளியில் யாரிடமும் சொன்னால் உன்னை கொன்று விடுவேன் என்று மிரட்டி உள்ளார். சிறுமி தன் பெற்றோருடன் ஈரோட்டில் வேலைக்கு சென்ற போது ஜெயங்கொண்டம் விளந்தையை சேர்ந்த பழனிவேல் மகன் சிவகுமார்(27) என்பவர் அந்த சிறுமியிடம் பிரகாஷுடன் உறவு வைத்ததை வீட்டில் சொல்லி விடுவேன் என்று மிரட்டி பாலியல் வன் தாக்குதல் செய்துள்ளார்.

இந்நிலையில் அந்த சிறுமி கர்ப்பம் ஆகி உள்ளார். இதனை அறியாமல் அந்த சிறுமி தனியாக தங்கி வேலைக்கு பார்த்து வந்துள்ளார்.இந்நிலையில் சிறுமி கடந்த சில மாதங்கள் முன்பு குழந்தையையும் பெற்றெடுத்துள்ளார்.

இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லா உத்தரவின்படி அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் சுமதி பிரகாசை முன்னதாக கைது செய்து குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைத்தனர்.

சிவகுமார் மட்டும் தலைமறைவாக இருந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சிவகுமார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இதனைத்தொடர்ந்து ஜெயங்கொண்டம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் கலைகதிரவன் அறிவுறுத்தலின்படி அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா பரிந்துரையின் பேரில் அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி சிவக்குமாரை குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டார்.

இதற்கான உத்தரவு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிவகுமாரிடம் வழங்கப்பட்டது.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!